கணவரை கொன்ற குடும்பத்தினரை பழி தீர்க்க நள்ளிரவில் அரிவாளுடன் வந்த மனைவி! போலீஸ் என கூறி வெறிச் செயல்
பொன்னேரி: பொன்னேரியை அடுத்த மீஞ்சூரில் தனது கணவரின் கொலைக்கு பழித்தீர்க்க போலீஸ் வேடத்தில் சென்ற மனைவி, 3 பேரை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் தோட்டக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் விஷ்ணு (24). இவருடைய சகோதரர் விஷால் (22). இவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள்.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பொன்னேரி பெரியகாவணம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (26) என்பவரை வெட்டிக் கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் விஷ்ணும் விஷாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 29ஆம் தேதி நள்ளிரவு 5 பேர் கொண்ட கும்பல் தோட்டக்காடு கிராமத்தில் உள்ள விஷ்ணுவின் வீட்டிற்கு சென்று அங்கு அவருடைய தந்தை ரகு (48), தாய் ஜெயபாரதி (42), விஷாலின் மனைவி அர்ச்சனா (21) ஆகியோரை பெட்ரோல் ஊற்றி மிரட்டிவிட்டு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதைத் தொடர்ந்து மூன்று பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தொடர்பாக மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் கடந்த ஜூன் மாதம் நடந்த லட்சுமணம் கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. விஷ்ணு போலீஸில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக லட்சுமணின் மனைவி ரம்யாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனது கணவரின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் உறவினர்களுடன் சேர்ந்து விஷ்ணு, விஷால் வீட்டிற்கு ரம்யா கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு சென்றதாக தெரிகிறது. அப்போது கதவை திறந்த ரகு, "இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே யார் நீங்கள்" என கேட்டார். அதற்கு தங்களை போலீஸார் என கூறிய ரம்யா உள்ளிட்டோர் வீட்டிற்குள் புகுந்தனர்.
அங்கு விஷ்ணுவை தேடிய போது அவர் இல்லாததால் அங்கிருந்தவர்களை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ரம்யா உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர். நேற்று முன் தினம் பொன்னேரி சின்னகாவணத்தைச் சேர்ந்த ரம்யா (24), வசந்த் (26), மணிகண்டன் (23), திருப்பதி (22), லட்சுமணனின் அண்ணன் மாறன்ராஜ் (29), ஜெயசாரதி (21) ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்து இன்னும் சில கூலிப்படையினரை தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், இரவு 12 மணி இருக்கும். அப்போது யாரோ அவர்கள் வீட்டு கதவை தட்டியதாக தெரிகிறது. யாரென ரகு கேட்ட போது "நாங்கள் போலீஸ் வந்திருக்கிறோம், விஷ்ணு சிறையில் இருந்து தப்பியதால் அவரை தேடி வந்திருக்கிறோம்" என சொல்லவே அவர்கள் கதவை திறந்ததனர். உடனே உள்ளே நுழைந்த அந்த கும்பல் அங்கு விஷ்ணு இல்லாததால் அங்கிருந்த மூவரையும் வெட்டினர்.
இதையடுத்து அவர்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். நாங்கள் எல்லாம் வெளியே வந்து பார்த்த போது அந்த 10 பேர் கொண்ட கும்பல், எங்களை பார்த்தவுடன் தப்பியோடிவிட்டனர். பிறகு அவர்கள் மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தோம் என அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications