டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்.. மது வாங்க வந்தவர்களை ஓட ஓட விரட்டியடித்த மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் மது வாங்க வந்தவர்களை ஓட ஓட விரட்டியடித்தனர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

womans chased away people who tried to buy alcohol near in Nellai

இந்நிலையில் சுரண்டை அருகேயுள்ள பரங்குன்றாபுரம் பகுதியில் புதியதாக ஒரு டாஸ்மாக் கடை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடை திறந்த 7ஆம் தேதி முதலே குடிமகன்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதன்காரணமாக பெண்கள் தனிமையில் எங்கும் சென்றுவர முடியாத நிலையுள்ளதால் இந்தக்கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் டாஸ்மாக் கடையை அகற்றிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடையை திறக்க விடாமல் பெண்கள் போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடையை மூடா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

அப்போது டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க சில குடிமகன்கள் திரண்டு வந்தனார். அவர்களை பெண்கள் அடித்து விரட்டினர்.

3 men kill friend under influence of alcohol

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர்கள் பெண்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near in Nellai public protest against tasmac. They were chased away people who were comes to by alcohol.
Please Wait while comments are loading...