உளுந்தூர்பேட்டை: டாஸ்மாக்கை சூறையாடிய பெண்கள்.. பாட்டில்களை நடுரோட்டில் போட்டுடைத்ததால் பதற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டது. கடையில் இருந்து மது பாட்டில்களையும் கைப்பற்றி நடுரோட்டில் போட்டு அவர்கள் உடைத்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊருக்குள் வரும் மதுக்கடைகளை சூறையாடும் மக்கள் மது பாட்டில்களையும் சாலையில் போட்டு உடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Womans ransacked tasmac near i Ulundurpet

மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய உயர்நீதிமன்றமும் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே எம்.குண்ணத்தூரில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மது கடையின் பூட்டை உடைத்து, மதுபாட்டிகளை வெளியே கண்டு வந்து ரோட்டில் போட்டு உடைத்தனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Womans were protest against tasmac in Ulundurpet. They taken bottles from tasmac shops and broken.
Please Wait while comments are loading...