கோவையில் கருத்தரிப்பு ஊசி விபரீதம்- வலிப்பு வந்து இளம்பெண் பரிதாப பலி!
கோவை: கோவை மருத்துவமனையில் கருதரிப்பதற்காக சிகிச்சை பெற்ற வட இந்ந்திய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சலுவுக்சாவுத். கோவையில் தங்கநகை பட்டறை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சுஜாதாசாவுத். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
தனியார் மருத்துவமனை சிகிச்சை:
இதனால் கணவனும், மனைவியும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர் சிகிச்சையின் ஒரு பகுதியாக சுஜாதா சாவுத் நேற்று மருத்துவமனைக்குச் சென்றார்.
கருத்தரிக்க ஊசி:
அங்கு அவருக்கு கருத்தரிப்பதற்கான ஊசி போடப்பட்டது. அதன் பின்னர் வீடு திரும்பினார்.
திடீர் வலிப்பு:
நள்ளிரவில் திடீரென்று சுஜாதா சாவுத்துக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அதே தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பரிதாப உயிரிழப்பு:
அங்கு இரவு மருத்துவர்கள் இல்லாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுஜாதா சாவுத் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை:
இதுகுறித்து சுஜாதாவுக்கு மருத்துவம் செய்த தனியார் மருத்துவமனையின் மேல் வெரைட்டி ஹால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications