2 கணவர்கள்.. மாறி மாறி சண்டை.. கோபத்தில் பெற்ற குழந்தையை கொன்ற தாய்!
3 வயது குழந்தையை கொன்று தற்கொலைக்கு தாய் முயன்றுள்ளார்.
குளித்தலை: கள்ளக்காதல் பண்ணி தொலைக்கிறவங்க எல்லாம் குழந்தைகளையே சாகடிச்சிட்டு வருவது யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. தற்போதுகூட கரூர் மாவட்டத்தில் ஒரு தாய், தன் குழந்தையை இப்படித்தான் கொலை செய்துள்ளார்.
குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை - ரம்யா. இருவருமே கூலி வேலை செய்பவர்கள்தான். இவங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆனாலும், எப்பவுமே பிரச்சனை குடும்பத்தில் தாண்டவமாடி கொண்டே வந்தது.
இதற்கு காரணம், பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிமாறனை ரம்யா விரும்பியதுதான். இதில் இருவரும் நெருக்கமாகவே கர்ப்பமுமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்துவிட்டது.

மணிமாறன்
எந்த கணவனால் இதை பொறுத்து கொள்ள முடியும்? அதனால்தான் பிரச்சனை வெடித்தது. நித்தம் சண்டையும் தகராறுமாகத்தான் போனது. கடைசியில் ரம்யா குழந்தையை தூக்கி கொண்டு மணிமாறனுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார்.

2-வது புருஷன்
ஆனால் அப்போதும் ரம்யாவுக்கு நிம்மதி இல்லை. இப்போது பெண் குழந்தை வேதவர்ஷினிக்கு வயது 3. அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் இந்த குழந்தை எனக்கு பிறந்ததில்லை.. உனக்கு நான் 2-வது புருஷன்தானே, இன்னமும் நீ நிறைய பேரை கல்யாணம் பண்ணிப்பே" என்றெல்லாம் பேசி ரம்யாவுடன் சண்டை போட்டே வந்துள்ளார்.

மனசு வரவில்லை
2-வது புருஷனுக்கு முதல் புருஷனே பரவாயில்லை என்று நினைத்து, மனம் திருந்தி திரும்பவும் கணவனிடம் சென்றிருக்கிறார். தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் தம்பிதுரையோ, குழந்தையுடன் நின்ற ரம்யாவை ஏற்க மனசில்லாமல் அதற்கு ஒத்து கொள்ளவே இல்லை.

காலால் மிதித்தார்
இதனால் ஏற்கனவே மனம் நொடிந்து கொண்ட ரம்யாவுக்கு குழந்தைமேல் கோபம் வந்துள்ளது. இந்நிலையில்தான் நேற்று தன் அம்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை பூட்டிக்கொண்டு தன் குழந்தையை காலால் மிதித்தும் கயிற்றால் இறுக்கியும் கொன்றிருக்கிறார். மேலும் மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

குழந்தையின் சடலம்
ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரம்யாவை காப்பாற்றி குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தகவல் குளித்தலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை பெற்ற தாயே இறுக்கி கொன்றதை மட்டும் இன்னும் யாராலுமே ஜீரணிக்க முடியவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications