இதை எப்படி குடிப்பது... எண்ணெய் தண்ணீரை ஸ்டாலினிடம் காட்டி கதிராமங்கலம் பெண்கள் கண்ணீர்
கதிராமங்கலத்தில் குடிநீரில் கலந்துள்ள எண்ணெய் கலந்த நீரை பெண்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் காண்பித்தனர்.
கதிராமங்கலம் : கதிராமங்கலம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற மு.க.ஸ்டாலினிடம் பெண்கள் எண்ணெய் கலந்த குடிநீரை காண்பித்து கண் கலங்கினர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவரும் , சட்டசபை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கதிராமங்கலம் சென்று பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.

குடிக்கிற நீர் கெட்டுப்போச்சு
அவரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். பள்ளி மாணவி மதுமிதா, போராட்டக்குழு உறுப்பினர் கலையரசி, கதிராமங்கலத்தைச் சேர்ந்த கவிதா ஆகியோர் ஸ்டாலினிடம் குடிதண்ணீர் கெட்டுப்போச்சு, விவசாயம் செய்ய முடியல, ஓஎன்ஜிசியை வெளியேற்ற வேண்டுமென ஆவேசமாக கூறினர்.

கண்ணீர் விட்ட மக்கள்
எண்ணெய் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்து வைத்திருந்த பெண்கள் அதனை மு.க.ஸ்டாலிடம் காண்பித்து பெண்கள் கண்ணீர் வடித்தனர். மேலும் ஓ.என்.ஜி.சி. பணியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வேதனையுடன் கூறினர்.

நான்கு அதிமுக
அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் ஜிஎஸ்டிக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தவர், உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம் என மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜெயலலிதா ஜெயலலிதாதான்
ஜெயலலிதா சர்வாதிகாரியாக இருந்தாலும், மத்திய அரசு, மாநில அரசைக் கட்டாயப்படுத்திக் கொண்டு வரும் திட்டங்களுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், ஜெயலலிதாவால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட திட்டங்களுக்கெல்லாம் அவரது பெயரை சொல்லி ஆட்சி செய்கிறவர்கள் முழு ஆதரவு தந்துள்ளார்கள்.

திமுக நடவடிக்கை எடுக்கும்
திமுக கொண்டுவந்த திட்டமாகவே இருந்தாலும், மீத்தேன் திட்டத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டியதுதானே. 72 நாட்களாக கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்களை காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறினர். கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களும் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதனை பொறுமையாக கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க. போராடும் என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications