அசிங்கம் அசிங்கமாக எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள்... ஆத்தூரில் பெண்கள் போராட்டம்
சேலம்: குடும்பப் பெண்களுக்கு ஆபாசமான முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் அயோக்கியர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காத போலீஸைக் கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம், காந்திபுரம், சமத்துவபுரம், காட்டுகோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள், கடந்த சில மாதங்களாக தங்களுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், இதனால், குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படுவதாகவும், பெண்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பும் நபர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கெனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் மனு அளித்து இருந்தனர்.
ஆனால், போலீசார் இதுகுறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட பெண்கள் திரண்டனர். அனைவரும் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பிய அயோக்கியர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி. உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications