பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னையில் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னையில் எழுத்தாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' நாவலுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய எழுத்துப் பணியில் இருந்து முற்றிலும் விலகுகிறேன் என்று பெருமாள் முருகன் அறிவித்தார்.

இந்நிலையில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எழுத்தாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
'எழுத்துரிமை, கருத்துரிமை பறிக்கும் செயலில் இந்து அமைப்புகள் ஈடுபடுகின்றன. மாதொருபாகன் புத்தகத்தை திரும்பப் பெறக் கூறி பெருமாள் முருகனை மிரட்டி இருக்கின்றன' என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.
குந்திக்கு கர்ணன் பிறந்த கதை..
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் பேசியதாவது:
எழுத்தாளர் பெருமாள் முருகனை அச்சுறுத்திய ஆரியப் பார்ப்பனிய பா.ஜ.க. வன்முறைக் கும்பல்களை - கருத்துரிமைப் பறிப்பாளர்களர்களைக் கண்டித்து நடைபெறுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தத் தோழர்களுக்கு முதலில் எனது பாராட்டுகள்.
அவருக்கு ஆதரவாக, இங்கு சென்னையிலும், டெல்லியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. உலகெங்கிலிருமிருந்து இணைய தளங்களின் வழியே, ஆதரவுக் குரல்கள் வெளிப்படுகின்றன. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, எழுத்தாளர் பெருமாள் முருகன், தான் எழுதப்போவதில்லை என அறிவித்த முடிவை திரும்பப் பெற வேண்டும். பழையபடி எழுத வர வேண்டும். இந்த ஆதரவுக்குரல்களை கணக்கில் கொண்டு, மேலும் துணிச்சலாக எழுத வர வேண்டும்.
கணவன் மனைவிக்கு அப்பாற்பட்டு வெளியில் பாலுறவு வைத்துக் கொள்வது பல காலமாக இருந்துள்ளது. கேரளாவில், அதிகாரம் படைத்த நம்பூதிரிகளின் வாயிலாக குழந்தைகள் பெற்ற, நாயர் குடும்பங்கள் இருந்தன. டி.எம். நாயர் அவர்களேகூட ஒருமுறை, சென்னை எழும்பூர் ஸ்பர்டாஸ் சாலையில் பேசும்போது, "எனது உடம்பில் ஓடுகின்ற இந்த இரத்தம் என் தந்தைக்குச் சொந்தமானது என்று உறுதியாகக் கூற முடியாது. ஒரு நம்பூதிரிக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
அந்தளவிற்கு, சமூகக் கொடுமைகள் ஒருகாலத்தில் இருந்தன. அதற்காக, அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்திவிட முடியுமா? அந்த நாயர்கள் முன்னேறவில்லையா? சுயமரியாதை உள்ள வாழ்வு வாழவில்லையா?
காவிரிப்பூம்பட்டினத்தில் இயற்பனை என்ற ஒரு வணிகர். அவர் பெரும் வள்ளல். யார் எதைக் கேட்டாலும் தன்னிடம் உள்ளதைக் கொடுத்து வந்தார். ஒருநாள் ஒரு பார்ப்பனர், இயற்பனையின் மனைவியைத் தானமாகக் கேட்டார். இயற்பகை தன் மனைவியைத் தானமாகக் கொடுத்து விட்டார். பார்ப்பனர் வடிவில் வந்தவர் சிவபெருமான் என்கிறார் சேக்கிழார்.
இயற்பனை தன் மனைவியைப் பார்ப்பனர்க்குக் கொடுத்ததையும் - அப்பெண்ணை அப்பார்ப்பனர் அழைத்துக் கொண்டு போவதையும் பார்த்த ஊர் மக்கள், பார்ப்பனரைத் தடுத்துப் பெண்ணை மீட்க முயல்கின்றனர். இயற்பனை வாள் கொண்டு ஊர்மக்களை வெட்டிச் சாய்க்கிறார். பல கொலைகள் விழுகின்றன. இக்கதை சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வருகிறது.
அதற்காகப் பெரிய புராணத்தைத் தடை செய்யச் சொல்ல முடியுமா? அந்நூலை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இலக்கியங்களில் அந்தந்த காலகட்டத்தில் பதியப்படும் கருத்துகள், அச்சமூகத்தில் வழக்கத்தில் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதற்காக, அந்த இலக்கியத்தையே எரித்துவிட வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
குந்திதேவிக்கு கர்ணன் எப்படி பிறந்தான்? அண்மையில், மும்பையில் ரிலையன்சு மருத்துவமனைத் திறப்பு விழாவில் பேசிய, இந்தியப் பிரதமர் மோடி, கர்ணன் அந்த காலத்திலேயே வெளியில் கருவாகி பிறந்தவர் என்றார். குந்தியின் கர்ப்பப்பையில் கருவாக இல்லாமல் Stem Cell முறையில் பிறந்தவர் கர்ணன் என்று தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கும்பல்களே, உங்கள் மீதல்லவா காறி உமிழ வேண்டும்? மோடியை தலைவராக ஏற்றுள்ள நீங்கள், பெருமாள் முருகன் எழுதியதை எதிர்க்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? சூத்திரர்கள் தாசி மக்கள் என்று குறிப்பிட்ட பார்ப்பனிய சக்திகளுக்கு, திருச்செங்கோடு திருவிழா பாலுறவு பற்றிப் பேச என்னத் தகுதி இருக்கிறது?
இந்துத்துவா என்பது வெறும் மதவாதம் அல்ல. அது, ஆரிய இனவாதம்! பார்ப்பனிய மேலாதிக்கத்தைத் திணிக்கும், வர்ணாசிரம வாதம். ஐரோப்பிய தாராளவாதத்தைத் திணிப்பது, இந்துத்துவா! அதனைத் தமிழகத்தில் வளர்த்தெடுக்க, இங்குள்ள கருணாக்கள் உதவியுடன் பார்ப்பனிய சக்திகள் வருகின்றன.
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக, நான் பேசுவதில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. காரணம், எனக்கு, எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்து மீது விமர்சனங்கள் உள்ளன. மாற்றுக் கருத்துகள் உள்ளன. அவரது படைப்பிலக்கிய பாணி குறித்ததே எனது விமர்சனம்! ஆனால், அந்த பாணியில் எழுதுவதற்கு எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு முழு உரிமையுண்டு. அவரது, கருத்துரிமைக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்!
இவ்வாறு பெ.மணியரசன் பேசினார்.
முன்னதாக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications