பிளாஷ்பேக் 2015: 'பேச்சலர்' வாழ்க்கைக்கு குட்பை சொன்ன கிரிக்கெட் வீரர்கள்
சென்னை: 2015ம் ஆண்டில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
2015ம் ஆண்டு நிறைவடைய இன்னும் 2 நாட்கள் தான் உள்ளன. புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நாளை கண்விழித்து நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்க மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் 2015ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் விபரங்களை பார்ப்போம்.

தினேஷ் கார்த்திக்
பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது காதலியான ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் தென்னிந்திய கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.

ரோஹித் சர்மா
கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது நீண்டநாள் காதலியும், மேனேஜருமான ரித்திகாவை இந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். முன்னதாக ஜூன் மாதம் அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.

ரெய்னா
சுரேஷ் ரெய்னா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்த கையோடு ஏப்ரல் மாதம் பிரியங்கா சவுத்ரியை மணந்தார். வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரியங்கா திருமணத்திற்காக வேலையை விட்டுவிட்டதாக கூறப்பட்டது.

ஹர்பஜன்
கடந்த அக்டோபர் மாதம் ஹர்பஜன் சிங் தனது காதலியும், பாலிவுட் நடிகையுமான கீதா பஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications