ஆம், ஜெயலலிதா சொல்லாததையும் தான் செய்துள்ளார்: ஒப்புக் கொண்ட ஸ்டாலின்
திருவாரூர்: ஜெயலலிதா தான் சொல்லாததையும் செய்ததாகக் கூறி வருவது உண்மை தான் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில்,

பணப் பட்டுவாடா
அதிமுகவினர் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருகிறார்கள். இதை தேர்தல் ஆணையமும் சரி, காவல் துறையும் சரி கண்டுகொள்வதே இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

ஜெயலலிதா
ஜெயலலிதா அம்மையார் எதையுமே செய்யாமல் மக்களை பார்த்து செய்வீர்களா, செய்வீர்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் செய்துவிட்டேன். நான் சொல்லாததையும் செய்துள்ளேன் என்று கூறி வருகிறார்.

சொல்லாததையும் செய்தார்
ஜெயலலிதா சொல்லாததையும் தான் செய்துள்ளார். ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதாக சொல்லாமலேயே செய்துள்ளார். சென்னை அருகே இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவேன் என்று சொல்லாமலேயே செய்தார்.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. தலைவர் கருணாநிதி 6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார். அவர் முதல்வர் ஆன பிறகு பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications