திண்டுக்கல் லாட்ஜில் பயங்கரம்.. பெண் கழுத்தறுத்து கொலை.. இளைஞர் தற்கொலை!
விடுதியில் இளம்பெண் கொலை மற்றும் இளைஞர் தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன் இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே டி.எம்.டி. என்ற தனியார் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு கடந்த 10-ம் தேதி காலை பிரசாந்த் என்ற இளைஞர் ஒருவர் இளம் ஒருவருடன் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அறையினுள் சென்ற இருவரும் கதவை பூட்டிக் கொண்டு, வெளியே வராமல் இருந்துள்ளனர். நேற்று மதியம் ஊழியர்கள் அவர்களின் அறைக்கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சரி, பிறகு வந்து பார்க்கலாம் என்று விட்டுவிட்டனர். ஆனால் இன்று காலையும் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியபோது அப்போதும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கே பிரசாந்த் படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குளியல் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கே பிரசாந்துடன் தங்கியிருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்து கிடந்தார்.

இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலை செய்துகொண்ட பிரசாந்த், நிலக்கோட்டை கொங்கர்குளம் பகுதியை சேர்ந்தவர் என விடுதியில் முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரசாந்த் முகவரி உண்மைதானா? கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண் யார்? அவர்களுக்குள் என்ன தகராறு? என்பன குறித்து விசாரணையை கையிலெடுத்துள்ளனர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications