சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி இளம்பெண் படுகொலை- போலீஸ் விசாரணை
கரூர்: கரூரில் இளம்பெண் ஒருவரை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரூர் நகராட்சியை அடுத்துள்ள காமராஜபுரம், திருநகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் குத்தகைக்கு எடுத்து ஐந்தாண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.
தற்போது, இந்நிலத்தில் சோளம் விதைத்துள்ளார். நேற்று மதியம் வழக்கம் போல ராமலிங்கம் தோட்டத்துக்கு சென்றார். அப்போது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கிணற்றை எட்டி பார்த்தார்.
உள்ளே வெள்ளை நிற பிளாஸ்டிக் சாக்குப் பையில் ஒரு மனித உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நில உரிமையாளர் தர்மலிங்கத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
கரூர் டி.எஸ்.பி பெரிய்யயா, பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீஸார் கிணற்றில் மிதந்த மூட்டை வெளியே எடுத்தனர். மூட்டைக்குள் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் இருந்தது.
அந்த இளம் பெண் யார்? என்ன காரணத்தினால் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டார்? அல்லது வெளியூரில் கொலை செய்தா கொலையாளிகள் உடலை கொண்டுவந்து கிணற்றில் போட்டுள்ளனரா? என்பது குறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கரூர் நகரில் கடந்த சில நாட்களாக காணாமல் போன பெண்களின் புகைப்படங்களை வைத்து, உடலை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications