ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் கால் மட்டும் அடக்கம் - உடலை தேடும் போலீசார்!
ஈரோடு: ஈரோட்டில் ரயில் மோதி துண்டான இளைஞரின் கால் மட்டும் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு நகருக்கும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கும் இடையிலுள்ள காவேரி ஆற்றின் மீது செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் நவம்பர் 16 ஆம் நடந்து சென்ற இளைஞர் மீது அந்த வழியாக வந்த ரயில் மோதியது.

இதில் கால் துண்டான அந்த இளைஞர் காவிரி ஆற்றில் விழுந்துவிட்டார். துண்டான அவரது ஒரு கால் மட்டும் தண்டவாளம் அருகே இரத்தக் கறையுடன் கிடந்தது. இந்நிலையில், காவிரியாற்றில் விழுந்த இளைஞரை போலீசார் வழி நெடுகிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் அதிகமாக மழை பெய்ததால் அந்த இளைஞரை மீட்க முடியவில்லை. காவிரி ஆற்றில் விழுந்த இளைஞர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து ஈரோடு இரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் துண்டாகி விழுந்த காலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த காலை நேற்று ஈரோடு ரயில்வே போலீஸார் அடக்கம் செய்தனர். மேலும், கால் துண்டான இளைஞர் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications