• search

பால் கொடுத்தேன்.. மார்பு வலித்தது.. குழந்தையை கொன்னுட்டேன்.. பதற வைக்கும் வேளச்சேரி பெண்!

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
      பெற்ற குழந்தையை கொன்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய தாய் கைது- வீடியோ

      சென்னை: "புழுக்கமா இருந்தது... கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம்.. விடிகாலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன்... காலைல பார்த்தா என் குழந்தையை காணோம்... எப்படியாவது கண்டுபிடிச்சு குடுத்துடுங்க சார்.. ப்ளீஸ்" என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் இளம் தாய்.

      சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா - உமா. இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்புதான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சார்விக் என்று பெயரிட்டார்கள்.

      [தகுதியின் அடிப்படையிலேயே தேர்வானேன்.. சென்னை பல்கலை. துணைவேந்தர் பரபரப்பு!]

      போலீசில் புகார்

      போலீசில் புகார்

      போலீசில் புகார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், கதவை திறந்துவைத்து தூங்கி கொண்டிருந்தபோது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் சொன்னார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீசார் துரிதமாக விசாரணையில் இறங்கினர். 2 மாத குழந்தையை காணோம் என்று நேற்றெல்லாம் வேளச்சேரி பகுதியில் ஒரே பரபரப்பாக இருந்தது.

      நைட்டியுடன் பெண்

      நைட்டியுடன் பெண்

      போலீசார் முதல்கட்டமாக, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர். அப்போது நடுராத்திரி 2 மணி அளவில் நைட்டி போட்ட ஒரு பெண் குழந்தையை தூக்கி கொண்டு தனியாக போய் கொண்டிருந்தது தெரிந்தது. அந்த பெண் யாராக இருக்கும் என்று போலீசார் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தனர்.

      ஏரியில் சடலம்

      ஏரியில் சடலம்

      இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறிய 2 மாத குழந்தை அங்குள்ள ஏரி ஒன்றில் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டனர். இப்போது எந்தவித சந்தேகமும் இல்லாமல் போலீசாரின் வலுவான பார்வை குழந்தையின் தாய் உமா மீது விழுந்தது.

      நான்தான் கொன்றேன்

      நான்தான் கொன்றேன்

      கிடுக்கிப்பிடி விசாரணையும் தொடங்கியது. அப்போது பெத்த குழந்தையை கொன்றது தான்தான் என உமா ஒப்புக் கொண்டார். இதையடுத்து உமா கைது செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையை கொன்றதற்கு உமா சொன்ன காரணம், "குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மார்பகத்தில் அதிக வலி ஏற்பட்டதாம். அதனால்தான் குழந்தையை கொன்றாராம்".

      பெத்த மனம் கல்லா?

      பெத்த மனம் கல்லா?

      சத்தியமாக இது ஒரு காரணமாக இருக்கவே முடியாது. பால் கொடுக்கும்போது மார்பக வலி வந்தால் அதற்கு அந்த பச்சை மண் என்ன பண்ணும்? அபிராமி கொன்ற 2 குழந்தைகளையே இன்னும் மறக்க முடியாத நிலையில், 2 மாத குழந்தையை ஒரு தாய் கொன்றிருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும்தான் ஏற்படுத்துகிறது. ம்ஹூம்.. போற போக்கில் பழமொழியை மாத்த வேண்டி இருக்கும்போல... "பெத்த மனம் கல்லு... பிள்ளை மனம் பித்து" என்று!!

      வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

      English summary
      Young Mother kills 2 month male child in Velacherry

      நாள் முழுவதும் oneindia
      செய்திகளை உடனுக்குடன் பெற

      We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more