நாகர்கோவில் அரசு பஸ்சில் பெண் சடலம்... கொலையா? தற்கொலையா? - போலீஸ் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அரசு பேருந்தில் வாயில் நுரைதள்ளிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு உதகையில் இருந்து சனிக்கிழமையன்று இரவு அரசு விரைவு பேருந்து சென்றுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி அதிகாலை பேருந்து நாகர்கோவிலைச் சென்றடைந்தபோது, பேருந்தில் பெண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

Young woman from Coimbatore found dead in SETC bus

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த வடசேரி காவல்துறையினர் அப்பெண்ணின் கைப்பையை சோதனை செய்தனர்.

அப்போது அவர் கைப்பையில் இருந்த வாக்காளர் அட்டையில் அந்தப் பெண் கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மனைவி முத்துலெட்சுமி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவருடைய உறவினர்களுக்குத் தகவல் கொடுத்த காவல்துறையினர், மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணையைத் மேற்கொண்டுள்ளனர்.

வாயில் நுரை தள்ளப்பட்டிருந்ததால் விஷம் குடித்து இறந்தாரா? எதற்காக நாகர்கோயிலுக்கு வந்தார்? உள்பட பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 22-year-old woman from Coimbatore was found dead in a government bus at Vadasery in Kanyakumari district on Sunday morning.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற