சென்னை மெட்ரோ ரயிலை இயக்கிய 28 வயது இளம் புயல்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலை இயக்கியவர் ப்ரீத்தி என்ற 28 வயது பெண் என்ஜினீயர் ஆவார். இந்த இளம்புயல்தான் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சவாரியை நடத்தியவர் ஆவார்.
சென்னையின் புதிய சரித்திரமாக, சென்னைவாசிகளின் நீண்டநாள் கனவாக இருந்து வந்த மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி வைத்தார்.

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி வைத்தார்.
இந்த மெட்ரோ ரயிலை இயக்கியவர் 28 வயதான ப்ரீத்தி ஆவார். இவர் அரசு தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தவர்.
‘சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயிலை முதன்முறையாக இயக்கியது என் மகள் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது' என ப்ரீத்தியின் தந்தை அன்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகளுக்கு ரயில் என்ஜின் டிரைவர் ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு மெட்ரோ ரயில் வேலைக்கு விண்ணப்பித்தார். தேர்வானார்.
மொத்தம் 3 பேர் கடைசியாக பயிற்சிக்கு வந்துள்ளனர். அதில் எனது மகள் தேர்வானார். இது எனக்கு மகிழ்ச்சி தந்தது.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் டெல்லியில் பயிற்சி எடுத்துள்ளார் ப்ரீத்தி. அதன் பின்னரே சென்னை மெட்ரோ ரயிலை இயக்க களம் குதித்தார்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications