நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய சென்னை இளைஞர் கைது
கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய இளைஞரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் சதீஷ். இவர் ஒரு மெடிக்கல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 25-ம் தேதி பிறந்த நாள். அதனால் அவரது பிறந்தநாளை நண்பர்கள் சிறப்பாக கொண்டாட எண்ணினர். எனவே நண்பனுக்காக கேக் வாங்கி வந்தனர். அந்த கேக்கை சதீஷ் பொது இடத்தில் வைத்து அதாவது சாலையில் வைத்து, பட்டா கத்தியில் வெட்டியதாக கூறப்படுகிறது.

சதீஷ் பட்டா கத்தியால் கேக் வெட்டியது செல்போனில் நண்பர்கள் பதிவு செய்தனர். அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இது காட்சி வைரலாக போனது. இந்த காட்சியை கண்ட எம்ஜிஆர் நகர் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் கேக் வெட்டப்பட்டுள்ளதாகவும், சதீஷின் இந்நடவடிக்கையை மிரட்டும் தொனியில் உள்ளதாகவும் போலீசார் கூறி சதீஷை தேடி விரைந்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நண்பர்கள் வற்புறுத்தலால் பட்டாக்கத்தியால் கேக் வெடியதாக சதீஷ் தெரிவித்தார். ஆனால், இப்படி பட்டா கத்தியால் கேக் வெட்டினால் மற்ற இளைஞர்களிடம் இது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி போலீசார் சதீஷை கைது செய்தனர். இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி பினு பிறந்த நாளன்று கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications