தேசியக் கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர் கைது: போலீசார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசியக் கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மகேந்திரன் என்ற இளைஞரை சென்னை புளியந்தோப்பு தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு இளைஞர் தேசியக் கொடியை எரிப்பது போன்ற காட்சி வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வந்ததது.

அந்த இளைஞர் திலீபன் மகேந்திரன் என்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து தற்போது சென்னையில் வசித்து வருபவதாகவும் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் இருந்த அவரை புளியந்தோப்பு தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications