எப்படிடா கேட்கலாம் பத்து ரூபாய்... டாஸ்மாக் கடையையே இழுத்து முடிய "குடிமகன்".... கைது!
சேலம்: சேலத்தில் பீருக்கு 10 ரூபாய் குறைத்துக் கொடுத்து விட்டு, கடைக்காரர் கேட்ட எக்ஸ்ட்ரா காசைக் கொடுக்க மறுத்து ஒரு குடிகார இளைஞர், கடையில் பெரிய கலாட்டா செய்து கடையை இழுத்து மூடி விட்டார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவரைக் கைது செய்து கடையைத் திறந்து உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்றினர்.
சேலம் களரம்பட்டி ஆட்டோ நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பீர் வாங்க வந்தார். கடையில் இருந்த ஊழியர்களிடம் ரூ.120 கொடுத்து ஸ்ட்ராங் பீர் பாட்டில் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர் பீர் பாட்டில் விலை ரூ.130 என்பதால் மேலும் ரூ.10 தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

உடனே கொந்தளித்த அந்த இளைஞர் ரமணா ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்து விட்டார். ரூ.120-க்கு விற்பனை செய்ய வேண்டிய பீர் பாட்டிலை ரூ.10 கூடுதலாக வசூலித்து விற்பனை செய்கிறீர்களா?. தினமும் எத்தனை பீர் விற்பனையாகும். அதன்மூலம் எவ்வளவு பணம் கிடைக்கிறது? கூடுதலாக பணம் எதுவும் தரமுடியாது. ரூ.120-க்கு பீர் தர முடியுமா? முடியாதா? என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. பத்து ரூபாய் கொடுத்தால்தான் பாட்டில் தருவோம் என்று கடைக்காரர்கள் கூறி விட்டனர். அவ்வளவுதான், கோபம் உச்சத்திற்குப் போன அந்த இளைஞர், கடையின் ஷட்டரை திடீரென இழுத்து மூடினார். பின்னர் கிளம்பிப் போய் விட்டார். இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் பறந்தது. விரைந்து வந்த போலீஸார் ஷட்டரைத் திறந்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர்.
கடை விற்பனையாளர் பின்னர் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த பிரபுவைக் கைது செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications