அண்ணியின் கள்ளக்காதல்.. தட்டிக் கேட்ட கணவரின் தம்பி படுகொலை

Subscribe to Oneindia Tamil

சேலம்: தனது அண்ணியின் கள்ளக்காதலால் வெகுண்ட அவரது கணவரின் தம்பி அதைத் தட்டிக் கேட்டார். இதனால் கோபமடைந்த அண்ணி ஆள் வைத்து தனது கொழுந்தனாரை கொன்று விட்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர்கள் சிவசாமி, மற்றும் கோவிந்தராஜ். இருவரும் அண்ணன், தம்பிகள். சிவசாமியின் மனைவி கிருஷ்ணவேணி. கோவிந்தராஜுக்குத் திருமணம் ஆகவில்லை.

கிருஷ்ணவேணி, அதே பகுதியில் உள்ள செல்வக்குமார் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். போன இடத்தில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு விட்டது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் தனது வீட்டுக்கே செல்வக்குமாரை கூப்பிட்டு சந்தோஷமாக இருந்துள்ளார் கிருஷ்ணவேணி.

ஒருமுறை இருவரும் ஒன்றாக இருந்ததைப் பார்த்து விட்டார் கோவிந்தராஜ். இதனால் அதிர்ச்சி அடைந்தார். அண்ணியிடம் இந்த தகாத செயலை விட்டு விடுமாறு கண்டித்துள்ளார். ஆனால் அதைக் கேட்கவில்லை கிருஷ்ணவேணி. மாறாக, கோவிந்தராஜ் மீது கோபமடைந்தார்.

இந்த நிலையில் திடீரன கோவிந்தராஜ் காணாமல் போய் விட்டார். இதையடுத்து அவரது தந்தை பரமசிவம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது செல்வக்குமார்தான், கிருஷ்ணவேணியின் தூண்டுதலின்பேரில் ஆள் வைத்து கோவிந்தராஜைக் கொலை செய்தது தெரிய வந்தது. கோவிந்தராஜைக் கடத்திக் கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பவானி ஆற்றில் போட்டு விட்டனராம்.

இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+