காதலித்து ஏமாற்றிவிட்டு 10 பவுன் நகையுடன் தப்பி ஓடிய வாலிபருக்கு வலைவீச்சு
தூத்துக்குடி: வீட்டிற்கு தெரியாமல் காதலனை திருமணம் செய்வதற்காக வந்த இளம்பெண்ணை ஏமாற்றிவிட்டு அவளுடைய பத்துபவுன் நகையுடன் மாயமான வாலிபரை தூத்துக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரத்தை சேர்நதவர் ராமசாமி. இவரது மகள் சுபா. கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் நடந்த உறவினர்கள் வீட்டு திருமணத்திற்கு சுபா குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அங்கு ஒரு அழகான வாலிபர் சுபாவுடன் வலிய வந்து அறிமுகம் ஆகியுள்ளார்.
தனக்கு சொந்த ஊர் மதுரை என்றும், பெயர் ஸ்ரீராம் என்றும் கூறியுள்ளார். சுமாராக இருக்கும் நம்மிடம் அழகிய வாலிபர் வந்து பேசுகிறாரே என்று உருகிய சுபா தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.
ஊர் திரும்பியதும் இருவரும் செல்போனில் பேசி பேசியே காதலை வளர்த்துள்ளனர். இநத நிலையில் இதுவரை பொறுத்தது போதும் திருமணம் செய்து கொள்ளலாம் வா என்று கூறி சுபாவை அவர் மதுரைக்கு அழைத்துள்ளார்.
உடனே சுபா தனது வீட்டிலிருந்த 10 பவுன் நகையை எடுத்து அணிந்து கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது காதலர் ஸ்ரீராம் தூத்துக்குடியில் தனது நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி தூத்துக்குடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் மிகவும் கருப்பாக இருப்பதால் பியூட்டி பார்லரில் சென்று அழகு படுத்தி கொள்ளலாம் என்று கூறி தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் பியூட்டி பார்லர் உள்ளே செல்லும் போது நகையுடன் செல்ல கூடாது என்று கூறி அதை கழற்றி தன்னிடமி கொடுக்குமாறு கூறியுள்ளார்.
சுபாவும் தான் அணிந்திருந்த 10 பவுன் நகையை கழற்றி அவரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றுள்ளார். இரண்டரை மணி நேரத்திற்கு பின் அவர் வெளியே வந்து பார்த்தபோது ஸ்ரீராம் மாயமாகியிருந்தார். அவருடைய செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் சுபா அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகு தான் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான நகையுடன் அவர் தப்பி சென்றது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் வந்து சுபாவிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் ஸ்ரீராம் குறித்து எந்த வித உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் போலீசார் சுபாவுக்கு அறிவுரை கூறி ஊருக்கு அனுப்பி வைத்தனர். ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான நகையுடன் தப்பி ஓடிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அறிமுகமில்லாத நபரை காதலித்து வீட்டை விட்டு ஓடிவந்து தன்னுடைய பத்துபவுன் நகையையும் பறிகொடுத்துவிட்டு செய்வதறியாது நிற்கிறார் சுபா.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications