விழுப்புரத்தில் பெண் குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வாலிபர்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அடுத்தவர் மனைவி குளிக்கும்போது அவரை செல்போனில் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் உள்ள வாணியர் தெருவில் வசித்து வருபவர் கமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருக்கையில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்(28) என்பவர் கமலாவை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அதன் பிறகு அந்த வீடியோவை காட்டி மிரட்டி கமலாவிடம் பணம் பறித்துள்ளார்.
பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை இணையதளத்தில் போட்டுவிடுவேன் என்று கூறி ரூ.3 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார் வினோத். இந்நிலையில் அவர் கமலாவிடம் மேலும் ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து கமலா நடந்த சம்பவம் பற்றி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து நேற்று விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வினோதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications