திருப்பூரில் பணக்கார அத்தையை கடத்த முயன்ற மருமகன் கைது
திருப்பூர்: திருப்பூரில் வசதியாக வாழும் அத்தையை கடத்தி பணம் பறிக்க முயன்ற மருமகன் கைது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர்-கொடுமுடி சாலையில் உள்ள தொட்டியபாளயைத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. அவரது மனைவி காந்திமதி(43). கடந்த வெள்ளிக்கிழமை காந்திமதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காரில் அங்கு வந்த மர்ம கும்பல் அவரை கடத்த முயன்றது. அந்நேரம் வெளியே சென்றிருந்த பழனிச்சாமி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
தனது வீட்டு வாசலில் இருந்து கார் கிளம்புவதை பார்த்து அதை நிறுத்த கையை காட்டியுள்ளார். அப்போது காருக்குள் இருந்து காந்திமதியின் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் காந்திமதியை கீழே தள்ளிவிட்டுச் சென்றனர். மேலும் காரில் இருந்து ஒரு செல்போனும் கீழே விழுந்தது.
பழனிச்சாமி இது குறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்போன் மற்றும் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த செல்போன் தாராபுரம், நாதம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் லிங்கசாமி(24) உடையது என்று தெரிய வந்தது.
வெள்ளக்கோவிலில் உள்ள செல்போன் ஏஜென்சியில் வேலை பார்க்கும் லிங்கசாமியும் அவருடன் வேலை பார்க்கும் தொட்டியபாளையம் கோயக்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த ரூபாமணியின் கணவர் சசிக்குமாரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் வசதியாக வாழும் தனது அத்தை காந்திமதியை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார் லிங்கசாமி. இதையடுத்து சசிக்குமாருடன் சேர்ந்து காந்திமதியை கடத்த முயன்றார்.
இந்நிலையில் போலீசார் லிங்கசாமி மற்றும் சசிக்குமாரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications