தலையை நசுக்கி இளைஞர் கொடூர கொலை... காதல் விவகாரமா?
சேலம் அருகே மலை உச்சியில் தலையை நசுக்கி இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரமே கொலைக்குக் காரணமாக கருதப்படுகிறது.
சேலம்: சேலம் மாவட்டத்தில், மலை உச்சியில் இளைஞர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு நசுக்கி கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை - உடையாப்பட்டி பைபாஸ் சாலையில் உள்ளது நாமாமலை. இந்த மலை உச்சியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்குள்ள படிக்கட்டுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

நேற்றுக்காலை நடைப்பயிற்சி செய்த சிலர் படிக்கட்டுகளில் ரத்தம் உறைந்திருப்பதைக் கண்டு அருகில் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தை எட்டிப்பார்த்தனர். அப்போது தலைநசுங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் கொடூராக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது தலை நசுங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டனர். உடலின் அருகே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த பெரிய கல் ஒன்று கிடந்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவரின் வலது கை விரல்களில் ஒவ்வொரு எழுத்தாக அபி என்று எழுதப்பட்டுள்ளது. பெருவிரலில் சூர்யா என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. மேலும் இளைஞரின் மார்பில் காதல் சின்னமான இதயத்தில் அம்பு பாய்வது போன்று பச்சை குத்தப்பட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா அல்லது முன்பகை காரணமா என விசாரித்து வரும் போலீசார் கொல்லப்பட்டவர் யார் எந்தப்பகுதியைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர். மேலும் இளைஞரை கொடூரமாக கொன்ற கொலையாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications