சிறுமிக்கு காரில் லிப்ட்.. காட்டு பகுதிக்கு கடத்தி கொன்று சடலத்துடன் இளைஞர் உறவு.. ஊட்டியில் பகீர்

Subscribe to Oneindia Tamil

உதகை: பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தவிட்டுக்கோடு மந்து பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அவர் உதகையில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

Youth murdered class 9 girl student and sexually assaulted in Ooty

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணயில் அந்த சிறுமி வழக்கமாக வீட்டிலிருந்து பள்ளிக்கும் பள்ளியிலிருந்து வீட்டிற்கும் நடந்தோ அல்லது பேருந்திலோ செல்வார்.

மேலும் சில நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டாரின் வாகனங்களில் பயணம் செய்தும் வீட்டிற்கு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி சம்பவத்தன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் அழைத்ததன் பேரில் அவரது காரில் சிறுமி ஏறியதாக சக மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாரும் கிராம மக்களும் வெவ்வேறு பகுதிகளில் தேடினர்.

அப்போது சிறுமி வீட்டிற்கு வழக்கம் போல் செல்லும் சாலையையொட்டிய இடத்தில் கார் ஒன்று சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது யாரோ ஒரு இளைஞர் பதற்றத்துடன் சுற்றியதாகவும் அவர்தான் அந்த காரை விட்டு சென்றதாகவும் கூறி அந்த நபரை ஒருவர் எடுத்த வீடியோவை போலீஸில் கொடுத்தனர்.

Youth murdered class 9 girl student and sexually assaulted in Ooty

அதில் அந்த இளைஞர் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் என்று சிறுமியின் பெற்றோர் அடையாளம் காட்டினர். இதையடுத்து அங்குள்ள வனப்பகுதிக்கு போலீஸாரும் கிராம மக்களும் போய் பார்த்தனர். அப்போது மாணவியின் புத்தக பை இருந்தது. அப்படியே சற்று தொலைவுக்கு சென்ற போது பலத்த காயங்களுடன் மாணவி உயிரிழந்து சடலமாக கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவியின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதகை அரசு தலைமைக்கு நீலகிரி மாவட்ட எஸ்பி கே. பிரபாகர் நேரில் சென்று சிறுமியின் உடலை பார்வையிட்டார். விசாரணையில் பள்ளியில் இருந்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்த மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாக ஏமாற்றி லிப்ட் கொடுத்து ரஜ்னேஷ் அழைத்து சென்றதாக தெரிகிறது.

Youth murdered class 9 girl student and sexually assaulted in Ooty

பின்னர் அப்படியே அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த மாணவி சப்தமிட்டதால் எங்கே சிக்கிவிடுவோமோ என அஞ்சி அந்த சிறுமியை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு பிறகு அந்த உடலுடன் உறவு கொண்டுவிட்டு புதர் பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் காரை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மாணவியை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். கொலையாளி ஊட்டியில் இருந்து தப்பிவிடாத வகையில் தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகிறார்கள். பள்ளிக்கு சென்ற மாணவி தனது பக்கத்து வீட்டு இளைஞரால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+