பலாத்காரம் செய்ய முயன்ற கும்பலிடம் இருந்து பெண்ணை காத்த இளைஞர்- உயிரை பறிகொடுத்த சோகம்
சென்னை: பல்லாவரம் ரயில் நிலையம் அருகே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கும்பலிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற முயன்ற வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜான்சன் 20 வயதே நிரம்பிய இளைஞர். இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் மறைமலை நகர் செல்வதற்காக பல்லாவரம் ரயில் நிலையம் மேம்பாலம் அருகே வந்துள்ளார் ஜான்சன். அப்போது பாலத்தின் அடியில் பெண்ணிடம் ஒரு கும்பல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த ஜான்சன் தட்டி கேட்டார். அந்த கும்பலிடம் இருந்து பெண்ணை மீட்க முயன்றுள்ளார். அப்போது கும்பலில் இருந்த ஒருவர் ஜான்சனை கத்தியால் குத்தினார்.
இதனைப் பயன்படுத்தி அந்த பெண் தப்பி விட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த கும்பல் ஜான்சனை இழுத்து அருகில் இருந்த புதருக்குள் போட்டு விட்டு தப்பி விட்டது. ஜான்சன் மயக்கமாக கிடந்தது, யாருக்கும் தெரியவில்லை.
நீண்ட நேரம் கழித்துதான் இது தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்குள் ஜான்சன் இறந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக், சதீஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications