பெண்களின் சேலையை பிடித்து இழுத்த மதுரை சிம்பு: கட்டிப் போட்டு அடித்து நொறுக்கிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் தெருவில் நடந்து சென்ற பெண்களின் சேலை, துப்பட்டாவை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து அடித்து நொறுக்கினர்.

ஈரோடு பிரப்ரோட்டில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவர் அந்த வழியாக வந்த பெண்களின் சேலையை பிடித்து இழுத்துள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவிகளின் துப்பட்டாவை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை கண்டித்தும் கேட்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் அவரின் கை, கால்களை கட்டிப் போட்டி அடித்து நொறுக்கினர். மேலும் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன்(28) என்பதும், மதுவிற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சிலம்பரசனை ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+