கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் தஞ்சை பள்ளிகள்; மேலும் 2 பள்ளிகளில் 14 பேருக்கு தொற்று உறுதி!

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சையில் மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை பாதிக்கப்பட்ட 225 பேரில் 120 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆட்டம் போடும் கொரோனா

ஆட்டம் போடும் கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் இருந்த கொரோனா தற்போது 60,000-க்கும் மேல் பாதிப்பு பதிவாகி வருகிறது. நாட்டில் மகாராஷ்டிரா, கேரளா , தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மட்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் முன்பு அடங்கி இருந்த கொரோனா தற்போது ஆட்டம் காட்டி வருகிறது.

கொரோனா கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை

கொரோனா கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை

குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது எனக் கூறலாம். அங்கு கடந்த 2 வாரமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

மேலும் 13 பேருக்கு கொரோனா

மேலும் 13 பேருக்கு கொரோனா

இதுவரை 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இந்த நிலையில் தஞ்சையில் மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் தனியார் பள்ளியில் 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

120 பேர் குணமடைந்தனர்

120 பேர் குணமடைந்தனர்

ஆடுதுறை தனியார் பள்ளியில் மாணவர்கள் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை பாதிக்கப்பட்ட 225 பேரில் 120 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தஞ்சை மாவட்ட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+