காதலியை பங்கு போட்ட காதலன்.. 4 பேர் இல்லையாம் 6 பேராம்! தஞ்சையை தவிக்க வைத்த பாலியல் வக்கிரம்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அந்த பெண் சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அதாவது திங்கட்கிழமை கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த தெற்கு கோட்டை பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரை மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அங்கு மறைந்திருந்த கவிதாசனின் நண்பர்களான திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இதனை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த இளம் பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதை எடுத்து பாலியல் வன்கொடுமை, கூட்டு சதி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாலியல் வன்கொடுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கவிதாசனும் அந்த இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தபோது தனியாக சந்திக்க வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்று கவிதாசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் கத்தி முனையிலும் பீர் பாட்டிலை உடைத்தும் மிரட்டி அந்த இளம் பெண்ணை நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதற்கிடையே கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைத்து போலிசார் தனி தனியாக விசாரணை நடத்தினர். அப்போது தப்பியோட முயன்றதால் கவிதாசனின் கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதாக பெண் எஸ்.ஐ சூர்யாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவர் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது 4 பேர் இல்லை 6 பேர் என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கவிதாசன், திவாகர், பிரவீன், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வேல்முருகன் என்பவரும் மற்றொரு 17 வயது சிறுவனும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆனால் இவர்கள் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications