ஒரு வாழைப்பழத்தில் விஷம்.. இன்னொன்றில் இல்லை.. காதலி கொலை.. சிக்கிய ஐயப்பன்.. 2019ன் திகில் கிரைம்!
காதலியை வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொன்றார் காதலன்
தஞ்சாவூர்: "இந்தா.. வாழைப்பழம் சாப்பிடு.. இதில விஷம் கலந்திருக்கு.. நாம செத்து போயிடலாம்.." என்று சொல்லி காதலியை பழம் கொடுத்தே சாகடித்துள்ளார் இளைஞர்! வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொன்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை இந்த மாத இறுதியில் ஏற்படுத்தியது.
கும்பகோணத்தில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார் அந்த இளம்பெண்.. நந்தவனம் கிராமத்தை சேர்ந்தவர்.. அப்போதுதான் ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. தனியார் மகளிர் சுய உதவிக்குழு நிறுவனத்தில் ஐயப்பன் வேலை பார்த்து வந்தார்.. 5 வருட காதல் இவர்களுடையது!

பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐயப்பன் வாத்தியாராக வேலை பார்த்தபோது, அந்த ஸ்கூலில் +2 படித்தவர் தான் இந்த இளம்பெண்.. ஆனால், 5 வருஷத்துக்கு பிறகு, இப்போது அந்த பெண்ணுடன் பேசுவதை, பழகுவதை ஐயப்பன் நிறுத்திவிட்டாராம்.
இதனால் சந்தேகம் அடைந்த ஐயப்பன், பெண்ணை பற்றி நிறைய பேரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் தன் காதலி, அவர் வேறு ஒரு இளைஞருடன் பழகி வந்தது தெரியவந்தது. இதை பற்றி ஐயப்பனே அந்த பெண்ணை நேற்று சந்தித்து நேரடியாக விசாரித்தார். அதற்கு "நாங்க வெறும் ஃப்ரண்ட்ஸ்தான்.. சந்தேகப்படாதே.." என்று சொல்லி சமாளித்துள்ளார் காதலி.
ஆனால் ஐயப்பனுக்கு என்னமோ சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.. மனசு ஆறவில்லை.. அதனால் அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார்.. ஒரு கட்டத்தில், தகராறு முடிந்ததும், "சரி வா.. வீட்டுல போய் உன்னை டிராப் பண்ணிடறேன்" என்று சொல்லி அவரை பைக்கில் உட்கார வைத்து கூட்டி வந்துள்ளார். ரெட்டிப்பாளையம் அருகே உள்ள இருட்டான பகுதியில் வந்து பைக்கை நிறுத்தினார்.
அப்போது காதலியிடம் திடீரென உருக்கமாக பேச ஆரம்பித்தார்.. திடீரென 2 வாழைப்பழத்தை காதலியிடம் நீட்டினார்.. "இனிமேல் நாம ஒன்னு சேர மாட்டோம்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு.. நம்மை 2 வீட்டிலயும் பிரிச்சிடுவாங்க.. நாம வாழறதைவிட, இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு இறந்துவிடலாம்' என்று சொல்லி பழத்தை நீட்டினார்.
அதில் ஒன்றில் விஷம் கலந்தது.. இன்னொன்றில் விஷம் இல்லாதது.. விஷம் கலந்த பழத்தை காதலியிடம் நீட்ட அவரும் அதை வாங்கி சாப்பிட்டார்.. விஷம் இல்லாத பழத்தை ஐயப்பன் சாப்பிட்டார். இதற்கு பிறகு வீட்டில் கொண்டு போய் காதலியை இறக்கிவிட்டுவிட்டு ஐயப்பன் கிளம்பி சென்றுவிட்டார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் காதலிக்கு தலை சுற்றி கொண்டுவந்தது.. விஷயத்தை தந்தையிடம் அந்த பெண் சொல்ல.. உடனடியாக பதறியடித்து கொண்டு, ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்... ஆனால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.. இதனையடுத்து ஐயப்பனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications