தஞ்சை.. கணவர் மொபைலை திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: கணவரின் செல்போனை எடுத்து பார்த்த மனைவிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உடனே கணவரோடு சண்டை போட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அந்த கர்ப்பிணி.

தஞ்சை நகரில்தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. புகார் கொடுத்த பெண், ஏற்கனவே விவாகரத்தாகி, மறு திருமணம் செய்து கொண்டவர்.

அதுவும், வாலிப வயதில் காதலித்து வந்த வாலிபரை திருமணம் செய்தவர். முதல் கணவரை விட்டு விட்டு 2வது கணவரை அதுவும் காதலித்தவரை மணமுடித்தும், பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது அந்த கர்ப்பிணி வாழ்க்கை.'

விவாகரத்து பெற்றவர்

விவாகரத்து பெற்றவர்

தஞ்சை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுகாசினி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில், இளம் வயதில் காதலித்து வந்த நித்யானந்தம் என்பவரை கடந்த 2015ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், சுஹாசினியை உறவினர்களுக்கு தெரியாமல் நண்பர்கள் மத்தியில்தான் திருமணம் செய்துள்ளார் நித்தியானந்தம்.

6 வருட திருமண வாழ்க்கை

6 வருட திருமண வாழ்க்கை

ஆறு ஆண்டுகளாக சுஹாசினியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார் நித்தியானந்தம். இந்நிலையில் கடந்த ஓராண்டாக நித்யானந்தத்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சுஹாசினி ஒரு நாள் நித்யானந்தத்தின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.

செல்போனில் ஷாக் போட்டோ

செல்போனில் ஷாக் போட்டோ

செல்போனில்தான் விபரீதம் இருந்தது. நித்தியானந்தம் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் போட்டோ செல்போனில் இருந்துள்ளது. இதை பார்த்து சுஹாசினி மிரண்டு விட்டார். இதுகுறித்து கேட்டபோது நித்தியானந்தம் தான் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு 20 நாட்களேயான ஆண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருவை கலைக்க சொன்ன கணவர்

கருவை கலைக்க சொன்ன கணவர்

மேலும் தற்போது கர்ப்பமாக இருக்கும் சுகாஹாசினியிடம், கருவை கலைத்து விடுமாறு ஒரே போடாக போட்டார். மேலும் தான் இரண்டாவது மனைவியுடன்தான் வாழ விரும்புவதாகவும் நித்தியானந்தம் சுஹாசினியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சுஹாசினி தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் எஸ்.பி.யிடம் புகார்

போலீஸ் எஸ்.பி.யிடம் புகார்

இருப்பினும், போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாததால் தனது கணவர் மீது உடனே வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் சுஹாசினி. மேலும் கர்ப்பமாக இருக்கும் தன்னை, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 நாட்கள் அலைக்கழித்ததோடு, கணவர் மீதும் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார். கணவர் மீது உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் பரபரப்பில் உள்ளது எஸ்பி ஆபீஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+