மேகதாது: மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க போராடும்.. வைத்திலிங்கம் பேச்சால் சர்ச்சை.. பின்னணி என்ன?
தஞ்சாவூர்: மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுக கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க.கவுக்கு அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலில் இருக்கும் தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க இன்று போராட்டம் நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான அ.தி.மு.க நடத்தும் முதல் போராட்டம் இது என்பதால் இந்த போராட்டம் பல்வேறு தரப்பின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

விடியல் என்னாச்சு?
இதேபோல் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ''தி.மு.க அரசே விடியல் என்னாச்சு? பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு என்னாச்சு?'' என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முக்கிய மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வைத்திலிங்கம்
இதேபோல் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், '' கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தி.மு.க மக்களை ஏமாற்றியுள்ளது. கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
மத்திய அரசும் கர்நாடகாவின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராகவும் அ.தி.மு.க போராட்டத்தில் ஈடுபடும்'' என எச்சரித்தார். அ.தி.மு.க கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க இருக்கும் நிலையில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று வைத்திலிங்கம் கூறி இருப்பது பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடும் எதிர்ப்பு
பா.ஜ.க மட்டுமில்லாது அ.தி.மு.க.வினர் இடையேயும் வைத்திலிங்கத்தின் பேச்சுக்கு எதிப்பு வலுத்து வருகிறது. தேர்தலுக்கு பிறகும் மத்திய அரசுடன் அ.தி.மு.க இணக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம்தான் டெல்லி சென்ற ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் மீது மனக்கசப்பு
இந்த நிலையில் வைத்திலிங்கத்தின் மத்திய அரசுக்கு எதிரான பேட்டி பல்வேறு யூகங்களை கிளப்பி இருக்கிறது. ஜெயலலிதாவின் தனிப்பட்ட பாசத்தை பெற்று இருந்தவர் வைத்திலிங்கம். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். சசிகலா தரப்பினர் மீது தற்போதும் வைத்திலிங்கம் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் மீதும் இவருக்கு மனக்கசப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்து வைத்திலிங்கம் மத்திய அரசுக்கு எதிராக பேசியிருக்கலாம் என்று கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
-
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications