ஸ்கூட்டியில் ஸ்கூலுக்கு வந்த தஞ்சை காவ்யாவுக்கு என்னாச்சு? 13 ஆண்டு காதல்! புதிய திருப்பம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சையில் பள்ளி ஆசிரியையின் சம்பவம் பெருத்த அதிர்ச்சியை அம்மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.. வழக்கம்போல் ஸ்கூட்டியில் ஸ்கூலுக்கு சென்று கொண்டிருந்த டீச்சரை, திடீரென வழிமறித்து குத்திக்கொலை செய்துவிட்டார் காதலன்.. தற்போது போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றையும் காதலன் அளித்துள்ளார். என்ன நடந்தது தஞ்சாவூரில்?

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலகளக்குடியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி.. இவர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆவார்.. இவரது 26 வயது மகள் காவ்யா..

Thanjavur Kavya Tanjore

ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.. இவரை அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்ற 29 வயது பெயிண்ட்ர் காதலித்துள்ளார்.. காவ்யாவும், அஜித்குமாரை விரும்பி உள்ளார்.. அந்த வகையில் இவர்கள் 13 வருடங்களாக உருகி உருகி காதலித்துள்ளனர்.

இருவருமே ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்... ஆனால், அஜித்குமாரை காவ்யா காதலிப்பது அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்பதால், காவ்யாவுக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது..

ரத்த வெள்ளத்தில் காவ்யா

இந்த விஷயம் தெரிந்த அஜித்குமார் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார்.. மறுநாள் காலை வழக்கம்போல் ஸ்கூட்டியில் காவ்யா ஸ்கூலுக்கு சென்று கொண்டிருந்தபோது, கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே அஜித்குமார் அவரை வழிமறித்துள்ளார்.. நிச்சயதார்த்தம் குறித்து கேட்கவும், இருவருக்குள்ளும் வாக்குவாதம் வெடித்துள்ளது.

அப்போது உச்சக்கட்ட ஆத்திரமடைந்த அஜித்குமார், கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால் காவ்யாவை சரமாரியாக குத்தி கொன்றுவிட்டார்.. பிறகு அம்மாப்பேட்டை போலீசில் அஜித்குமாரே சென்று சரணடைந்துவிட்டார்..

பரபரப்பு வாக்குமூலம்

இந்நிலையில், அஜித்குமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.. அதில், "நானும் காவ்யாவும் 13 வருடங்களாக காதலித்து வந்தோம். நாங்கள் காதலிப்பது, காவ்யாவின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை...

நான் பெயிண்ட்ர் வேலை செய்வதால், சமீபத்தில் கோவையில் பெயின்டர் வேலைக்கு சென்றிருந்தேன். அந்த நேரத்தில், வீட்டிலேயே வைத்து காவ்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி உள்ளனர்.. சொந்த மாமா மகனையே காவ்யாவுக்கு அவரது பெற்றோர் பேசி முடித்துள்ளனர்..

நிச்சயதார்த்தம் வீடியோ

ஆனால், இதை காவ்யா என்னிடம் சொல்லவில்லை. வழக்கம்போலவே என்னிடம் போனில் பேசினார்.. 4 நாட்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் செல்போனில் வீடியோகாலில் பேசி கொண்டிருந்தபோதுதான், நிச்சயதார்த்தம் நடந்ததை என்னிடம் காவ்யா சொன்னார்... ஆனால், அதை நான் நம்பவில்லை.

உடனே காவ்யா நிச்சயதார்த்த போட்டோ, வீடியோவை அனுப்பி வைக்கவும் நான் அதிர்ச்சியடைந்தேன்.. நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காவ்யாவிடம் சொன்னேன்.. ஆனால் காவ்யா மறுத்துவிட்டார்.. வேண்டுமானால் நான் பெற்றோரிடம் வந்து பேசுகிறேன் என்றேன்.. அதற்கும் காவ்யா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நீதான் என் மனைவி

காலையில் பள்ளிக்கு சென்ற காவ்யாவை வழிமறித்து பேசினேன். "நிச்சயதார்த்தம் நடந்ததை ஏன் சொல்லவில்லை? அதை மறைத்துவிட்டு என்னிடம் எப்படி சகஜமாக உன்னால் பேச முடிந்தது? 13 வருட காதலை எப்படி ஒரு நாளில் தூக்கி எறிந்தாய்? நீதான் என் மனைவி என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. நாம் திருமணம் செய்து கொள்ளலாம்" என்றேன். அப்போதும் முடியாது என்று சொல்லிவிட்டார். இந்த ஆத்திரத்தில்தான் கத்தியால் குத்தி கொன்றேன்" என்று தெரிவித்துள்ளார்..

தஞ்சை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜித்குமாரின் இந்த வாக்குமூலம், ஆசிரியை கொலை வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+