ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக! சமுதாய பலத்தால் புதிய தெம்பு பெறும் டிடிவி தினகரன்!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது முதல் வெற்றியை பலமாக பதிவு செய்திருக்கிறது.
ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் அமமுக வெற்றிபெற்றிருக்கிறது.
அமமுகவின் இந்த வெற்றிக்கு சமுதாய ரீதியிலான வாக்குகளே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்கள்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சுடச்சுட வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பரவலாக தனது வெற்றியை பதிவு செய்து வருகிறது. மாநகராட்சிகளில் நண்பகல் 12 மணி நிலவரப்படி ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் கூட, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அமமுக வேட்பாளர்கள் ஒரு சில இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் 9 வார்டுகளில் வெற்றுபெற்றுள்ளதன் மூலம் அந்தப் பேரூராட்சியை அமமுக கைப்பற்றியுள்ளது.

திமுக அதிர்ச்சி
இது ஆளுங்கட்சியான திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரத்தநாட்டில் தனது முதல் வெற்றியை பலமாக பதிவு செய்துள்ள அமமுக, நகராட்சிகளிலும் கணிசமான இடங்களில் வெற்றியை எதிர்பார்த்து வருகிறது. முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாததால் பிற்பகல் 3 மணிக்கு மேல் அமமுகவுக்கு கிடைத்துள்ள கவுன்சிலர்களின் எண்ணிக்கை ஓரளவு முழுமையாக தெரியவரும்.

சமுதாய பலம்
டிடிவி தினகரன் குடும்ப உறுப்பினர்கள் வழி உறவுகளும், சமுதாய ரீதியிலான வாக்குகளுமே ஒரத்தநாட்டில் அமமுகவை கை தூக்கிவிட்டிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. களப்பணியை பொறுத்தவரை திமுக, அதிமுக வேட்பாளர்களை காட்டிலும் அதிக முனைப்போடு அமமுக வேட்பாளர்கள் ஆற்றியதும் ஒரத்தநாடு வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தினகரன் ரியாக்ஷன்
ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றிய தகவல் அறிந்ததும் தினகரன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். பிரச்சாரத்துக்கு தாம் செல்லாத நிலையில் குக்கர் சின்னத்தை மட்டும் முன்னிறுத்தி சாமர்த்தியமாக பரப்புரை செய்து வெற்றிபெற்ற அமமுக வேட்பாளர்களை நேரில் அழைத்து பாராட்டுவார் எனத் தெரிகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications