தாத்தா, அப்பா போல் உதயநிதி எந்த பொறுப்பு கொடுத்தாலும் கலக்குவார்.. அமைச்சர் அன்பில் மகேஷ்
தஞ்சாவூர்: சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதிக்கு எந்த பொறுப்பு வழங்கினாலும், அவரது தாத்தா, அப்பா போல் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபிப்பார் என தஞ்சையில் மகேஷ்பொய்யாமொழி பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தஞ்சை சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி கட்டடங்களை மறு சீரமைப்பு செய்வதற்கு 75 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆட்சியில் முதல் முறையாக 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாணவி தற்கொலை
தேவைப்படும் பட்சத்தில் நபார்டு வங்கி மூலம் நிதி பெறப்பட்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டிடங்கள் சீரமைப்பு செய்யப்படும். நேற்று சென்னை மாணவி தற்கொலை குறித்து கேட்தற்கு, ஏற்கனவே பல விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சமுதாயத்தில் இதுபோல் தொடர்ந்து நடப்பது என்பது வேதனை அளிப்பதாகவும், மாணவிகளுக்கு அதிக அளவில் ஆலோசனை தேவைப்படுகிறது.

சேவை
அரசு சார்பாக எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும், இது மாதிரி ஆங்காங்கே நடப்பது மனதிற்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்த அவர், உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அவரின் சேவை ஒரே தொகுதியுடன் முடங்கி விடக்கூடாது.

உதயநிதியின் சேவை
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிற்கும் அவரின் சேவை தேவை என்ற ஆசையில்தான் அனைவரும் கூறுகிறார்கள். எந்த ஒரு பொறுப்பைக் கொடுத்தாலும் அவரின் தாத்தா, அப்பா போல் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூப்பிப்பார் என அவர் தெரிவித்தார். ஏற்கெனவே அவர் சென்னை மேயராக தேர்வு செய்யப்படுவாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

துணை முதல்வர்
அதே வேளையில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என அவரது பிறந்த நாளின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியிருந்தார். இது தனது விருப்பம் மட்டும் அல்ல, அனைவரது விருப்பமும் என்றார். இந்த நிலையில் உதயநிதி துணை முதல்வராவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதில் எது நடக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications