டிடிவி வேண்டாம்.. இரட்டை இலைதான் வேண்டும்.. கூட்டணிக்குள் குண்டு வைத்த போஸ்டர்கள்
தஞ்சாவூர்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திருவையாறு பகுதியில் இரட்டை இலை சின்னம் எங்கே?. இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது.

தேர்தல் பணி தீவிரம்
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடித்துவிட்டது. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளிள் மும்முரம் காட்டி வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் என அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார். மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை இல்லா ஃபிரிட்ஜ், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் இலவசம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
போஸ்டரால் பரபரப்பு
இந்நிலையில், திருவையாறு பகுதியில் இரட்டை இலை சின்னம் எங்கே?. இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் NDA கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக தலைமை இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலிலும் ஒருமுறை திருவையாறு தொகுதி கூட்டணி கட்சிகளுக்கே வழங்கியது. இந்த நிலையில், NDA கூட்டணியில் உள்ள அம்மா முன்னேற்றக் கழகத்திற்கு திருவையாறு தொகுதிக்கு அதிமுக சீட் ஒதுக்கியதாக கூறப்பட்டது.
இரட்டை இலை சின்னம் எங்கே..
இந்நிலையில், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் சுவர்களில் இரட்டை இலை சின்னம் எங்கே என்றும், திருவையாறு தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் போட்டியிட முடியாமல் தடுக்கும் துரோகிகளே என்றும், இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் இப்படிக்கு அதிமுக உண்மை தொண்டன் என்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications