அதிரப்போகுது டெல்டா.. நாளை 8 மாவட்டங்களில் பந்த்! மத்திய அரசு அலுவலகங்களை மறிக்கும் விவசாயிகள்
தஞ்சாவூர்: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து போராட்டத்தை நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்து நாளை டெல்டா மாவட்டங்களில் திமுக விவசாய அணி உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை ஏற்று காவிரியில் உரிய நேரத்தில் போதிய நீரை திறந்து விடாத காரணத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் கருகி உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையின்படி 5,000 கன அடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருக்கின்றன. விவசாயிகள், கன்னட அமைப்புகள், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று கன்னட அமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக விவசாய அணி மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருவையாறு திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பெரியசாமி, காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் தெய்வசிகாமணி உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அந்த கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீதம் உள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடியை தொடங்கிடவும், காவிரிக்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரக்கோரி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை போராட்டத்துக்கு திமுக விவசாய அணி உட்பட அனைத்து விவசாய சங்கங்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளனர். இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications