Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சை அருகே கொடூரம்.. பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து படுகொலை.. ஓட ஓட விரட்டி கொன்ற மர்ம நபர்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி சென்று வெட்டி படுகொலை செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் என்ற ஊர் உள்ளது. நேற்று இரவு அந்த பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

bjp-woman-leader-murder-near-thanjavur

ஓட ஓட விரட்டி கொலை

இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தஞ்சை பட்டுக்கோட்டையில் வசித்து வரும் சரண்யா என்பதும், முன்பு மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிரணி பொறுப்பாளர் பதவி வகித்து வந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில், நேற்று இரவு சரண்யா கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் என்றும் அப்போது மர்ம நபர்கள் சிலர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்ததாகவும் அங்குள்ளவர்கள் கூறியதாக தகவல் வெளியானது. தலை துண்டித்து கொலை செய்ய என்ன காரணம் என்றும், முன்விரோதம் காரணமாக தான் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

யார் இந்த சரண்யா?

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் வாடைகைக்கு வீடு எடுத்து வசித்து வருபவர் பாலன் (வயது 45). இவரது மனைவி தான் சரண்யா (வயது 35). இவர்கள் இருவரும் அதே ஊரில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஜெராக்ஸ் கடை ஒன்றும், அய்யனார் டிராவல்ஸ் என்ற கடையும் நடத்தி வந்துள்ளனர்.

சரண்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். முதலில் மதுரையை சேர்ந்த சண்முகசுந்தரத்தை தான் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். அவர்களுக்கு 15 வயதில் சாமுவேல் என்ற மகன்மும் 13 வயதில் சரவணன் என்ற மகனும் வசித்து வந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் இறந்த நிலையில், பாலனை திருமணம் செய்து உதயசூரியபுரம் பகுதியில் மகன்களோடு வசித்து வந்தார்.

எப்படி நடந்தது?

நேற்று வழக்கம் போல் பாலன், சரண்யா மற்றும் அவரது இரு மகன்கள் ஆகியோர் கடைக்கு சென்று வேலை பார்த்தனர். பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினர். மகன்கள் மற்றும் கணவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா மட்டும் நடந்து வந்துகொண்டிருந்தார். வீடு 1 கிமீ தூரத்திற்குள் இருப்பதனால் அவர் நடந்தே வந்திருக்கிறார். அப்போது திடீரென ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டியுள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது அவரை அந்த கும்பலினர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் கத்தி கூச்சலிட்டப்படி சரண்யா ஓட முயன்றுள்ளார். எனினும் அந்த கும்பலினர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். கழுத்தின் முன்பகுதியில் அரிவாளால் வெட்டியதாலும், தலையின் பின்புறத்தில் அரிவாளால் வெட்டியதாலும் தலை துண்டாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரண்யா உயிரிழந்தார்.

அமைச்சர் கார் மீது செருப்பு வீசியவர்

கொலை செய்யப்பட்ட சரண்யா குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சரண்யா மதுரையில் வசித்து வந்த போது பாஜகவில் மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிரணி பொறுப்பாளர் பதவியில் இருந்தார். அப்போது மிகவும் அரசியலில் ஈடுபாட்டோடு இருந்து வந்தார். அந்த சமயத்தில் அமைச்சர் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசியதாக கைதான பெண்களில் சரண்யாவும் ஒருவர் ஆவார். இதன் பின்னர் கணவர் உயிரிழந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டையில் வசித்து வந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+