கறைபடிந்து காட்சி தந்த வரலாற்றுச் சின்னம் மனோரா! – கலக்கல் சுற்றுலாத் தலமாக மாற்றிய ஸ்டாலின்
தஞ்சாவூர்: கோடையைக் கொண்டாட விரும்புகின்றவர்களின் நினைவுக்கு உடனே வரும் ஊர் ஊட்டிதான். ஆனால் அதைத் தாண்டி பல அழகான ஊர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அப்படி மினி பட்ஜெட்டில் ஒரு இன்ப சுற்றுலா செல்ல திட்டம் போடுபவர்களுக்கு ஏற்ற ஊர் மல்லிப்பட்டினம்.
மிகச் சிறப்பான மீன்பிடித் துறைமுகம் உள்ள ஊரில், வரலாற்றுச் சின்னமான மனோரா ஸ்தூபியும் உள்ளது. இந்த ஊரில் ஓய்வு எடுத்தபடியே இருந்துதான் 'புதையல்' திரைப்படத்திற்கு மு.கருணாநிதி, திரைக்கதையை எழுதினார்.
அந்தளவுக்கு அவரது மனதை ஈர்த்த கடற்கரை கிராமம் மல்லிப்பட்டினம். அதனை அவரது ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத் தலமாக மாற்றியும் காட்டினார். ஆனால் ஆட்சி மாறியதால், கறைபடிந்த காடாக மாறியது மனோரா வரலாற்றுச் சின்னம். அதை மறுபடியும் மீட்டு, புதிய தோற்றத்தைக் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடற்கரை கலக்கல்
இப்போது இந்தக் கறைபடிந்த கடற்கரை கலக்கல் கடற்கரையாக மாறியுள்ளது. அது குறித்துப் பேசிய தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் "தஞ்சாவூர் மாவட்டம் தென்பகுதியில் உள்ளது பட்டுக்கோட்டை. அதன் அருகே உள்ள மல்லிப்பட்டினம் ஊராட்சிப் பகுதியில் 200 ஆண்டுகள் பழைமையான மனோரா நினைவுச் சின்னம் இருக்கிறது.

சுற்றுலா தலம்
ஆகவே அதை மையமாக வைத்து சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டோம். அப்படியே அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பையும் தர வேண்டும் என முடிவு செய்தோம். அதற்குத் தேவையான நிதியைத் தமிழ்நாடு அரசிடம் கேட்டிருந்தோம். அரசு அளித்த நிதியைக் கொண்டு அதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன" என்கிறார்.

10 ஆண்டு கால ஆட்சி
"கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் இந்த நினைவுச்சின்னம் கேட்பாரற்றுக் கிடந்தது. ஆகவே வரலாற்றுச் சின்னமான இந்தப் பகுதிக்கு அதிகமாக எந்தச் சுற்றுலாவாசிகளும் வராமல் இருந்தனர். ஆனால் அதற்கு முன்னால் 1997 ஆம் ஆண்டு மிகச் சிறப்பான சுற்றுலா பகுதியாக இருந்தது. அதன் பின்னால் எவ்வளவோ முறையிட்டும், அரசு செவி சாய்க்கவில்லை. தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு சென்றதன் மூலம் பெரிய மாற்றத்தை மனோரா சின்னம் பெற்றுள்ளது" என்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி
"முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மாவட்ட ஆட்சியராக ராஜாராம் இருந்தார். அப்போது இந்த நினைவுச் சின்னம் புதிய பொலிவுடன் காட்சி அளித்தது. அதன் பின்னால் அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக பாழாகிவிட்டது.
இந்த ஆட்சியில் 1கோடியே 75 லட்சம் ரூபாய் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கிக் கொடுத்தார். அந்தத் தொகையைக் கொண்டு, இப்போது மனோரா புத்தம் புதிய பொலிவைப் பெற்றுள்ளது. பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. உள்ளூர் வாசியாக இந்தச் சின்னம் எங்களின் பெருமை" என்கிறார் பேர் சொல்ல விரும்பாத ஒரு நிர்வாகி.
முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய நிதியில் 33 லட்சம் செலவில் பூங்காவும், படகு சவாரி செய்யப் படகுத்துறை 75 லட்சம் ரூபாயிலும் பயணிகள் தங்கும் விடுதி 45 லட்சம் ரூபாய் செலவில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் குழந்தைகள்
இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாடச் சறுக்கு மரம், ஊஞ்சல், சுழன்றுவரும் சறுக்குப் பாதை, பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அழகான கற்களால் ஆன நடைபாதை, அவசர தேவைக்குக் கழிப்பிடம் எனப் பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
மேலும் ஒரு பயிற்சி அரங்கம் கட்டப்பட்டுள்ளது. புதியதாகப் படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கிராமத்தில் வாழும் பெண்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும் நோக்கில் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் சுவையான மீன் உணவகம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. மிதக்கும் கடல் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

கடல் பகுதி
அருகிலேயே கடல் பகுதி என்பதால் தரமான மீன்களைப் பிடித்து உடனடியாக சமையல் செய்து வழங்கப்படுவதால் பொது மக்கள் அதிகமாக வருகை தருகின்றனர். இதன்வழியே நேரடியாகக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, கிராம வளர்ச்சிக்காகத் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. இங்கே வேலை பார்க்கும் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், "முன்பு இங்கு வருகை தரும் பயணிகள் எல்லாம் குடிக்கக் கூட நல்ல தண்ணீர் கூடக் கிடைக்காமல் வேதனையில் திரும்பிப் போவார்கள். ஆனால் இப்போது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு முறையாகச் செயல்படுவதால் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கிறார்கள்" என்கிறார்.

மனோரா நினைவுச் சின்னம்
இது கடந்த 20.10.2022இல் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை இந்த மனோரா நினைவுச் சின்னம் பகுதியில் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து சென்றுள்ளனர். இந்தப் பகுதியை ஒன்றிய அரசு கடல்பசு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. அதையொட்டியும் இப்பகுதி அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது. "இந்த மனோரா கடற்கரை மணல் உள்ள பகுதி அல்ல; களிமண் கொண்ட கடற்கரை. ஆகவே மெரினா போல் எளிதாக நடக்க முடியாது. ஆகவே அரசு அதை மாற்றி, மணலைக் கொட்டி மெரினாவைப் போல மாற்றம் செய்ய உள்ளது" என்கிறார் மாவட்ட ஆட்சியர்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications