கும்பகோணத்தில் விழுந்த இடி.. இந்து கோவிலில் "கிறிஸ்துவ தேவதை".. ஆவேசமாக கிளம்பி வந்த அர்ஜுன் சம்பத்
தஞ்சாவூர்: திமுக ஆட்சியில், இந்து அறநிலையத்துறையானது, அலங்கோலத்துறையாக மாறிவிட்டது என்று விமர்சித்திருக்கிறார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பர். என்ன காரணம்?
இந்து சமய அறநிலையத்துறை குறித்து, தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருப்பவர் அர்ஜூன் சம்பத்.. அதேசமயம், திமுக அரசு மீது தொடர்ந்து தன்னுடைய விமர்சனங்களையும் முன்வைத்து வருபவர்.

சமீபத்தில்கூட, "தமிழகம் சங்கிகளின் பூமி" அர்ஜூன் சம்பத் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகியிருந்தது.. "திருமாவளவனுக்கு இந்து என்கின்ற வார்த்தை அலர்ஜியாக உள்ளது. அதனால்தான் இந்து சமய அறநிலையத்துறையை சைவம், வைணவம் என தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்கிறார்.
கி.வீரமணி: வாதத்திற்காக இதை எடுத்துக் கொண்டாலும் திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்த சான்றிதழில் இந்து என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோலதான் முதல்வர் ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்டோரின் சான்றிதழிலும் இந்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை முதலில் மாற்றிவிட்டு இந்து சமய அறநிலையத்துறை பேரை மாற்றுவது குறித்து பேசலாம்
அப்படியானால் திருமாவளவன் கிறிஸ்தவ அறநிலையத்துறை, முஸ்லிம் அறநிலையத்துறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதை ஆதரிக்க வேண்டும். இந்து என்கின்ற அடிப்படையில் எல்லோரும் ஒன்று கூடுவதும், ஒற்றுமையோடு இருப்பதையும், இவர்கள் எதிர்ப்பதன் காரணமாகவே இதுபோன்ற கருத்துக்களை முன் வைக்கிறார்கள்..
இஸ்லாமியர்கள்: திட்டமிட்டு கிறிஸ்தவ, இஸ்லாமியர்களும், திராவிட இயக்கங்களும், இந்துக்களை இந்துக்கள் அல்லாதோர் என்ற பட்டியலில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள்.. அந்த முயற்சியை முறியடிப்போம் சனாதனம் காப்போம். ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை எவ்விதத்திலும் தடுக்க முடியாது. தமிழகம் சங்கிகளின் பூமி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பூமி" என்று கூறியிருந்தார் அர்ஜூன் சம்பத்.
இப்போதும்கூட, திமுக ஆட்சியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்.. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜூன் சம்பத், திமுக ஆட்சியில், இந்து அறநிலையத்துறை, அலங்கோலத்துறையாக மாறிவிட்டது.. இதற்கு சமீபத்திய உதாரணம், கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் வரையப்பட்டிருக்கும் படங்கள்தான்..
ஓவியங்கள்: திவ்ய தேசங்கள் 108ல் ஒன்றாக குறிப்பிடப்படும் திருகண்ணபுரம் கோவிலில், இப்போது புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இதையொட்டி, கோவில் மேற்கூரையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் புதுப்பித்து கொண்டிருக்கிறார்கள்..
இதில், இந்து கோவில் அடையாளங்கள் குறித்து எதுவுமே தெரியாத ஓவியர், கிறிஸ்துவ ஏஞ்சல் ஓவியங்களை அங்கு வரைந்து வைத்திருக்கிறார்.. திருக்கண்ணபுரம் கோவில் மேற்கூரை ஓவியம், கிறிஸ்துவ தேவதையை போல இருக்கிறது.. அதை உடனடியாக சீர்படுத்த வேண்டும்.. ஒருவேளை, அறநிலையத்துறை அதிகாரிகள் சரி செய்யவில்லையானால், இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்று அறிவித்திருக்கிறார் அர்ஜூன் சம்பத்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications