பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. விரைவில் அதிமுகவில் இணைவார் தினகரன்- மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்
Recommended Video

கும்பகோணம்: தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என மதுரை ஆதீனம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது தினகரனின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. இதையடுத்து இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு நடந்த போதிலிருந்து ஓபிஎஸ் அணியின் கோரிக்கையை ஏற்று தினகரனை ஈபிஎஸ் அணியினர் ஓரங்கட்டத் தொடங்கினர்.

இதையடுத்து இரு அணிகளும் இணைந்தவுடன் நிரந்தரமாக சசிகலாவும் தினகரனும் ஓரங்கட்டப்பட்டனர். இந்த நிலையில் ஆர் கே நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று பின்னர் அமமுக என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் அதிமுகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறுகையில் தினகரன் நிச்சயம் அதிமுகவில் இணைவார்.
அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார் மதுரை ஆதீனம். இதனால் அமமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அதோடு அவரால் எம்எல்ஏ பதவியை இழந்தவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications