அடிமைகளை கையில் எடுத்து.. எச்சரித்த கோவி செழியன்.. சிறுபான்மையினர் வாக்குகள் பற்றி பேசிய கேஎன் நேரு
தஞ்சாவூர்: நாளை தினம் தேர்தல் வந்தாலும் திமுக ஆட்சியை பிடிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மத்திய அரசு இங்கே இருக்கக்கூடிய அடிமைகளை கையில் எடுத்து கொண்டு இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்கிற கணக்கு தான் ஓட்டு திருட்டில் ஈடுபட விரும்புகிறது என்றும், அது சதி செயல் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் குற்றம்சாட்டினார். அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், சிறுபான்மையினர் வாக்குகள் விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
தஞ்சாவூா் மத்திய மாவட்ட திமுக சார்பில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி " என்ற வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், "2018 முதல் உள்ளாட்சி தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல், 2021 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே நாளை தினம் சட்டசபை தேர்தல் வந்தாலும் திமுக ஆட்சியை பிடிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மத்திய அரசு, இங்கே இருக்கக்கூடிய அடிமைகளை கையில் எடுத்து கொண்டு இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்கிற கணக்கு தான் ஓட்டு திருட்டு அது சதி செயல் இன்றைக்கு இருக்கிற தேர்தல் தேர்தல் மட்டுமல்ல இந்தியாவை பாதுகாக்க தேர்தல் இறையாண்மையை பாதுகாக்க தேர்தல் மோடி போன்றவர்கள் அமித்ஷா போன்றவர்கள் இங்கு இருக்கிற அடிமைகளை கை வைத்துக் கொண்டு நம்மளை வீழ்த்த இருக்கிறார்கள்" என்று கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "தஞ்சை மாவட்டத்திற்கு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டை ஆண்ட மண் தஞ்சை. தற்போது மத்திய அரசு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பிஎல்ஏ 2 பணி மிக முக்கியமாகும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 12 ஆவணம் இருந்தால் போதுமான மத்திய அரசு அறிவித்தது. தற்போது 13 ஆவணம் தேவை எனக் கூறியுள்ளனர்.
இதில் வாக்காளர்கள் சேர்ப்பதை விட யாரை சேர்க்கக்கூடாது என்பது முக்கியம். குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பணி அனைத்தையும் கவனித்து செயல்பட வேண்டும். தொடர்ந்து இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார். அதில் எந்த மாற்றமும் இல்லை " இவ்வாறு கே.என்.நேரு பேசினார்.












Click it and Unblock the Notifications