"All Finished"! அந்த சைகையை நான் திட்டமிட்டு காட்டவில்லை! ஸ்டாலின் விளக்கம்!
தஞ்சாவூர்: திமுக- காங்கிரஸ் இடையே அனைவரும் பாராட்டும் வகையில் கூட்டணி அமைந்துவிட்டதை All Finished என சைகை மூலம் நான் காட்டியது திட்டமிட்ட ஒன்றல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டு திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது அங்கு அவர் பேசுகையில், இந்த விழாவுக்கு நான் எந்த சூழலில் வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

நேற்று இரவு வரை கூட்டணி கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டுதான், அதுவும் வெற்றிகரமாக முடித்துவிட்டுதான், எல்லோரும் பாராட்டக் கூடிய வகையில் முடித்துவிட்டுதான் வந்திருக்கிறேன்.
நீங்கள் சமூகவலைதளங்களிலும் செய்தி சேனல்களிலும் பார்த்திருப்பீர்கள். ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறும் போது கையை எடுத்து ஒரு சைகை செய்திருப்பேன். அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை.
ஏதோ காரில் ஏறும் போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் முடிந்துவிட்டதா? என கேட்டேன். அதற்கு நான் "All Finished" , எல்லாம் முடிந்துவிட்டது என சைகை மூலம் சொன்னேன். அது இன்று வைரலாகியுள்ளது. மகிழ்ச்சியோடு நான் இங்கு வந்திருக்கிறேன்.
இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்யசபாவிற்கு இரு வேட்பாளர்களை அனுப்ப இருக்கிறோம். கூட்டணி கட்சிகளுக்கு இரு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதனால்தான் இந்த திருமணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு செல்ல வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா இல்லை முறியுமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது. காரணம், திமுகவிடம் இருந்து 39 தொகுதிகளையும் 2 ராஜ்யசபா சீட்டுகளையும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் திமுகவோ 25 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்டை மட்டுமே கொடுக்க ஒப்புக் கொண்டது.
ஆனாலும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் தொடர்ந்து திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்றுடன் (மார்ச் 5) கடைசி நாள் என்பதால் அக்கட்சி மார்ச் 3 ஆம் தேதி அன்று கூட்டணியை இறுதி செய்ய கெடு விதித்தது போன்ற நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனையில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் "25 தொகுதிகளுக்கு பதிலாக 28 தொகுதிகளை தருகிறோம். ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம். அதற்கு மேல் எதிர்பார்க்க வேண்டாம் என ஸ்டாலின், ப.சிதம்பரத்திடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதை காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொண்டது.
இதையடுத்து கூட்டணி ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது. இதை முடித்துக் கொண்டு வெளியே வந்த முதல்வர் ஸ்டாலினை, செய்தியாளர்களை பார்த்து "எல்லாம் முடிந்துவிட்டது" என சைகை மூலம் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications