தஞ்சாவூர் அருகே பெட்ரோல் பங்கில்.. பாழாய் போன பால விக்னேஷ் பிளான்.. காட்டிக் கொடுத்த சிறுவர்கள்
தஞ்சாவூர்: சில நேரங்களில் 2 பவுன் தங்கம் என்று சொன்னால் சாதாரணமாக விட்டு விடுவார்கள் என்று நினைத்து 20 பவுன் தங்கம் திருடுபோனதாக சொல்வார்கள். இன்னும் சிலர் ஆயிரம் காணாமல் போயிருக்கும். ஆனால் 50 ஆயிரம் திருடி விட்டார்கள் என்று பொய் சொல்லி, பணத்தை அவர்களே திருடிவிடுவார்கள்.. அப்படி ஒரு சம்பவம் தஞ்சாவூர் அருகே பெட்ரோல் பங்க்கில் நடந்துள்ளது.
திருட்டைவிட மோசமான செயல் என்றால், திருட்டு போன இடத்தில் வேலை செய்வர், மேலும் அதனை சாக்கா வைத்து மேலும் திருடுவது தான். அப்படித்தான் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பெட்ரோல் பங்கில் நடந்த கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக ரூ.50 ஆயிரத்தை திருடி நாடகமாடியதாக ஊழியர் கைதாகி உள்ளார். சிறுவர்கள் உள்பட 4 பேர் இதில் சிக்கியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் முத்துப்பேட்டை செல்லும் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்படுகிறது, உள்ளது. இந்லையில் இந்த அதிராம்பட்டினம் பெட்ரோல் பங்கில் இரவு சுமார் 2 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த 42 வயதாகும் பாலவிக்னேஷ்(வயது42) என்பவர் மட்டும் இரவில் தனியாக பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.
சம்பவம் நடந்த அன்று இரவு அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் பெட்ரோல் நிரப்பிவிட்டு 'போன் பே’ உள்ளதா? என கேட்டிருக்கிறார் அதற்கு பால விக்னேஷ், 'போன் பே’ இல்லை என்று கூறி உள்ளார். அப்போது அந்த நபர்களில் ஒருவர், பால விக்னேசிடம் கழிவறை எங்கே உள்ளது? என கேட்டுள்ளார். அதற்கு பால விக்னேஷ், பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள பகுதிக்கு அவரை அழைத்து சென்று கழிவறையை காட்டியிருக்கிறார். அப்போது திடீரென அந்த நபர், பாலவிக்னேசை கழிவறைக்குள் தள்ளிவிட்டு வெளியில் கதவை பூட்டினார்.
பின்னர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனங்களில் வந்த வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து பாலவிக்னேஷ் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாா். அந்த புகாரில், மர்மநபர்கள் பெட்ரோல் பங்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் மா்மநபர்களை தேடி வந்தனர். மேலும் பெட்ரோல் பங்கில் இருந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்து இருந்ததால் பணம் திருடிய மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமமான நிலை இருந்தது. எனினும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீசார் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்கள்.
இதைத் தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த 22 வயதாகும் முகமது மசூத் மற்றும் 3 சிறுவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 4 பேரும் சேர்ந்து பெட்ரோல் பங்கில் உள்ள கழிவறையில் பாலவிக்னேசை வைத்து பூட்டிவிட்டு கல்லாவில் இருந்த ரூ.1000 மட்டும் எடுத்து சென்றதாக கூறியிருக்கிறார்கள்.
ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர் பாலவிக்னேஷ் கொடுத்த புகாரில் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்பட்டிருந்த நிலையில் போலீசாரின் சந்தேகம் பாலவிக்னேஷ் மீது திரும்பியது. இதனால் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், மர்ம நபர்கள் பெட்ரோல் பங்கில் இருந்து ரூ.1000 மட்டுமே திருடி சென்றதும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெட்ரோல் பங்கில் இருந்த ரூ.50 ஆயிரத்தை பாலவிக்னேஷ் திருடி வைத்துக்கொண்டு நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து பாலவிக்னேஷ், முகமது மசூத் மற்றும் 3 சிறுவா்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெட்ரோல் பங்கில் சிறிய திருட்டு நடந்த நிலையில், அதனை பயன்படுத்தி பெட்ரோல் பங்க் ஊழியர் ரூ.50 ஆயிரத்தை திருடி நாடகமாடியதுடன், கடைசியில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications