பெற்ற மகனை விற்ற பரிதாப தந்தை.. குவியும் உதவிகள்.. நீங்களும் உதவலாமே
மகனை 10 ஆயிரம் ரூபாய்க்காக அடகு வைத்துள்ளார் தந்தை
Recommended Video

தஞ்சை: தன் குடிசை வீட்டை சீரமைக்க முடியாமல் பெற்ற மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த குடும்பத்துக்கு உதவிகள் புரிய நல்லுள்ளங்கள் விரைந்து வர ஆரம்பித்துள்ளன.
பட்டுக்கோட்டை அருகே அண்ணா குடியிருப்பு பகுதி வயல்வெளி நடுவில் குடிசை கட்டி வாழ்ந்து வந்தவர் மாரிமுத்து. இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு தமிழக அரசின் குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தினால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை எனகூறப்படுகிறது.

வெட்டவெளி வாழ்க்கை
புயல் அடித்தபோது மாரிமுத்து குடிசை காற்றில் பறந்தது. இதற்கான உரிய நிவாரணமும் மாரிமுத்துவுக்கு கிடைக்கவில்லை. இதனால் மழை, வெயில் என்று வெட்டவெளியில் குடும்பத்தை புயல் அடித்து இவ்வளவு நாள் வரை நகர்த்தி வந்தார்.

அடகு வைக்க முடிவு
எவ்வளவோ முயற்சி செய்தும் குடிசையை சீரமைக்க முடியவில்லை. புதுகுடிசை கட்டவும் கையில் பணம் இல்லை. அப்படியே கட்டினாலும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாவது தேவைப்படும்என்று சொல்லி விட்டார்கள்.இதனால் அடகு வைக்கவும் தன்னிடம் பொருள், உடமை எதுவுமே இல்லை என்பதால், 2-வது மகனை அடகுவைக்கும் முடிவுக்கு வந்தார்.

பண்ணை வேலை
அதன்படி, 3 வாரங்களுக்கு முன்பு தன்னுடைய 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி, நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பண்ணை முதலாளியிடம் விற்றுவிட்டார். பண்ணை வேலையுடன், ஆடு மேய்க்கும் வேலையிலும் சிறுவன் ஈடுபடுத்தப்பட்டிருப்பது சிறுவர்கள் நல அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

தமிழக மக்கள் அதிர்ச்சி
இதையடுத்து உடனடியாக விரைந்து சென்று சிறுவனை மீட்டு வந்தார்கள். அப்போதுதான் குடிசை மாற்ற வழி இல்லாமல் தன்னை, தன் தந்தையே அடகு வைத்து விட்டதாக சிறுவன் சொன்னான். இந்த செய்தி நேற்று ஊடகங்களில் வெளியானதும், தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஜீரணிக்க முடியவில்லை
மத்திய, மாநில அரசுகள் இருந்தும், எத்தனையோ தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் புயலுக்கு உதவியும், மாரிமுத்து பெற்ற மகனை பணத்துக்காக விற்றதை யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் மாரிமுத்து குடும்பத்துக்கு பலர் உதவ முன்வந்துள்ளனர்.

நாமும் உதவலாமே?
நம் வாசகர்களும் உதவலாமே.. விவரங்களுக்கு:
திரு. மாரிமுத்து
அண்ணா சதுக்கம்
பட்டுக்கோட்டை
செல்போன் எண்: 97918 47700
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications