Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணம் பெண் நாதக நிர்வாகி.. முதல் கணவருக்கு ஸ்கெட்ச்.. சிக்கலில் இரண்டாவது கணவர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாதக பெண் நிர்வாகியின் முதல் கணவனை ஏமாற்றி பணத்தை பறித்ததாகவும்,பின்னரை அவரை இரண்டாவது கணவரை வைத்து தீர்த்து கட்ட முயன்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா தேப்பெருமாநல்லூர் ஏ.கே.வி நகரை சேர்ந்த ஹரிபாரதிதாஸ்-இந்திரா தம்பதிக்கு 43 வயதில் ரோக்கேஷ் என்ற மகன் உள்ளார். இவர் சிங்கப்பூரில் கணினி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

Naam Tamilar Party Kumbakonam


இவருக்கும் கும்பகோணம் பழைய அரண்மனைத்தெருவை சேர்ந்த ராஜன்-நிர்மலா தம்பதியினரின் இளைய மகள் திவ்யாவுக்கும்(35) கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தீப்தா என்ற 6 வயது மகள் உள்ளார். திவ்யா நாம் தமிழர் கட்சி பிரமுகர். கும்பகோணம் நகராட்சி தேர்தலில் அந்த கட்சி சார்பாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் ரோக்கேஷை கடந்த ஜூலை 2ம் தேதி இரவு கும்பகோணம் அரசு கல்லூரி ரவுண்டானா பகுதியில் நந்தகுமார் உள்ளிட்ட சிலர் வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டியுள்ளார்கள். இதில் படுகாயமடைந்த அவர் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 25 தையலுக்கு மேல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரோக்கேஷ் போலீசிடம் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசாரிடம் ரோக்கேஷ் கூறுகையில், தான் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், என்னை சந்திக்க அவ்வப்போது விசிட்டிங் விசாவில் மனைவி திவ்யா சிங்கப்பூர் வந்து செல்வார்.

அவ்வாறு வரும்போது சிறுக சிறுக சுமார் 200 பவுன் நகைகளை என்னிடம் வாங்கி வந்தார். மேலும், எனது வங்கி கணக்கில் இருந்து, திவ்யாவின் வங்கி கணக்கிற்கு சுமார் ரூ.2 கோடியே 81 லட்சம் அனுப்பி உள்ளேன். அந்த பணத்தில் திவ்யா, தனது மற்றும் தனது பெற்றோர் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கிறார்.

இந்நிலையில், திவ்யாவிற்கு, அரசு மதுபான கடை பாரில் சப்ளையராக பணிபுரியும் இன்னம்பூர் மேலத்தெருவை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் என்னுடன் அடிக்கடி தகராறு செய்து வந்த திவ்யா, கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து கேட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே திவ்யா, நந்தகுமாரை இன்னம்பூர் காளியம்மன் கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டி கிராம நடைமுறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த டிசம்பரில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் கணவர் பெயராக நந்தகுமார் பெயரே குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னுடைய சொத்துக்களை பறிக்க அவ்வபபோது கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 10ம் தேதி கும்பகோணம் அரசு கல்லூரி ரவுண்டானா பகுதியில், ஒரு ரவுடி கும்பல் என்னை தாக்கி படுகாயப்படுத்தியது. இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே கல்லூரி ரவுண்டானா பகுதியில் நந்தகுமார் உள்ளிட்ட சிலர், என்னை படுகொலை செய்யும் முயற்சியில் வெட்டினார்கள்.அவர்கள் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் மகள் தீப்தாவை என்னிடம் அனுப்ப வேண்டும். மனைவி திவ்யாவுக்கு கொடுத்த ரூ.2 கோடி 81 லட்சம் மற்றும் என்னிடம் மிரட்டி எழுதி வாங்கிய வீடு மற்றும் நகைகளை மீட்டு தர வேண்டும் என்று ரோக்கேஷ் கூறியிக்கிறார். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார், நந்தகுமார் (31), சிவானந்தம்(25), அண்ணாதுரை(29) மற்றும் மதன் (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+