Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கஜா பாதிப்பு அதிகமாக உள்ளது.. சேத மதிப்பீட்டை உடனே கணக்கிட முடியாது.. மத்திய குழு தகவல்!

கஜா புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால், புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை உடனே அளிக்க முடியாது என்று மத்திய குழு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கஜா புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால், புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை உடனே அளிக்க முடியாது என்று மத்திய குழு தெரிவித்துள்ளது.

கஜா புயலால் தமிழகம் மொத்தமாக நிலைகுலைந்து போய் உள்ளது. 10 மாவட்டத்தில் மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதையடுத்து மத்திய அரசின் ஆய்வு குழு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது.

Gaja relief calculation will take more time says, the Central team

[எங்கிருந்தோ வந்தார்.. பள்ளங்களை நிரப்பினார்.. போய்க் கொண்டே இருந்தார்.. யாருங்க இவரு! ]

புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை முதற்கட்டமாக மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார்.

கஜா சேத மதிப்பீட்டை உடனே கணக்கிட முடியாது. கஜாவால் நிறைய இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.

சேதம் அதிகமாக இருப்பதால் உடனே கணக்கீடு செய்ய முடியாது. முழு ஆய்வு முடிந்த பின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

27ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம். ஆய்வு பணியில் 7 பேர் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் ஆய்வு செய்ய இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மத்திய குழு நேற்று புதுக்கோட்டையில் நேற்று இரவு 8 மணி வரை ஆய்வு செய்தது. திருச்சியில் சில ஆய்வுகளை செய்த குழு நேரிடியாக புதுக்கோட்டையில் ஆய்வு செய்து பின் நேரமின்மை காரணமாக ஆய்வை முடித்துவிட்டு திரும்பியது. இந்த குழு முழுமையாக ஆய்வு செய்யவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+