10 வருட உழைப்பு, சேமிப்பு, முன்னேற்றம்.. எல்லாம் போனது.. டெல்டாவை நாசம் செய்த கஜா #SaveDelta

டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்டாவை மொத்தமாக நாசம் செய்த கஜா புயல்- வீடியோ

    தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது.

    பத்து வருட சேமிப்பு, உழைப்பு வீணாகி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து இருக்கிறார்கள் அம்மாவட்ட விவசாயிகள். அங்கிருக்கும் பகுதிகள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து இருக்கிறது.

    கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது தமிழகம் முழுக்க இதற்காக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்

    அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்

    இந்த புயலால், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நீடாமங்கலம், ஆலங்குடி, சித்தேரி, குத்தாலம், வலங்கைமான், வடுவூர், திருமக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, திருத்துறைபூண்டி, தாராசுரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது.

    என்ன பிரச்சனை அவர்களுக்கு

    என்ன பிரச்சனை அவர்களுக்கு

    இங்கு பிரச்சனை என்பதே வாழ்வாதாரம்தான். சென்னை வெள்ளம் போல இங்கே பெரிய அளவில் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் வாழ்வாதாரம் பெரிய நசிவை சந்தித்துள்ளது. பத்து வருடமாக வளர்த்த தென்னை மரங்கள், மாமரங்கள், புளியமரங்கள் என்று மக்கள் எதன் வருமானத்தை இவ்வளவு நாள் நம்பி இருந்தார்களோ அதுவே அழிவை சந்தித்து இருக்கிறது

    இப்போதைய தேவை என்ன

    இப்போதைய தேவை என்ன

    இப்போதைய தேவை அவர்களுக்கு நிவாரண நிதியைவிட அடிப்படை வசதிகள்தான். அங்கு கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, உணவு இல்லை, எந்த கடைகளும் திறக்கவில்லை, எங்கும் பெட்ரோல், டீசல் கிடைக்கவில்லை. மக்களுக்கு நிவாரண நிதி கொடுக்கும் முன் முதலில் இதை செய்து கொடுக்க வேண்டும் என்றுதான் அம்மக்கள் விரும்புகிறார்கள்.

    2 லட்சம் பேர்

    2 லட்சம் பேர்

    புயல் பாதித்த மாவட்டங்களில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். 7 மாவட்டங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எல்லா மக்களுக்கும் சோறு போட்ட விவசாயிகள், தற்போது சாப்பாடு இல்லாமல் சொந்த ஊரிலேயே முகாம்களில் தங்கும் நிலைக்கு ஆளாகி உள்ளதுதான் இதில் பெரிய அவலம்.

    மிகப்பெரிய இழப்பு

    மிகப்பெரிய இழப்பு

    இந்த புயல் காரணமாக ஒவ்வொரு விவசாயியும் பல லட்சங்களை இழந்து இருக்கிறார்கள். இதற்கு முன் இயற்கை பேரிடரால் பெரிய அளவில் சேதங்களை சந்திக்காத டெல்டா மாவட்டங்களை இந்த புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. இதில் இருந்து அவர்கள் பொருளாதார ரீதியாக மீண்டு வர குறைந்தது 2 வருடங்களாவது ஆகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+