கஜாவால் பேரழிவை சந்தித்த டெல்டா.. நிலைகுலைந்த வாழ்வாதாரம்.. வரலாற்று துயரம்!
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து இருக்கிறது.
தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து இருக்கிறது. அங்கு மக்கள் பெருமளவில் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக நசிந்து போய் உள்ளது.
தற்போது தமிழகம் முழுக்க இதற்காக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எந்த மாவட்டங்கள்
இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

எல்லாமே போய் விட்டது
இந்த புயல் காரணமாக அங்கு மொத்தமாக மக்களின் வாழ்வாதாரம் நசிந்து போய் இருக்கிறது. சாலையில் இருந்த மரங்கள் அனைத்தும் விழுந்துவிட்டது. விவசாயத்திற்காக நட்ட பயிர்களில் மரம் விழுந்து பாழாகி உள்ளது. பல வருடமாக நட்டு வளர்த்த தென்னை மரங்கள் கொத்து கொத்தாக விழுந்துவிட்டது.

மீட்பு பணிகள் செய்ய முடியாத நிலை
மரங்கள் விழுந்த காரணத்தால் சாலை போக்குவரத்து மொத்தமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக அங்கு சாலையை சாலை போக்குவரத்து இல்லை. அதேபோல் 3 நாட்களாக அங்கு மின்சாரம் , தண்ணீர் , அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதனால் அங்கு மீட்பு பணிகள் தாமதம் ஆகியுள்ளது.

மக்கள் பெரும் கஷ்டம்
டெல்டா மாவட்ட பாதிப்புகள் பெரிய அளவில் வெளியே தெரியாத காரணத்தால் மக்கள் கடும் கோபத்திலும் இருக்கிறார்கள். அங்கு பலர் உணவின்றி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு நிலைமை சீராக இன்னும் 1 வாரம் ஆகும்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு











Click it and Unblock the Notifications