குருமூர்த்தி நீங்க இப்படி செய்யலாமா.. மங்காத்தா ஆடி சிக்கிய இந்து மக்கள் கட்சி மா.செ!

மங்காத்தா விளையாடிய இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் குருமூர்த்தி மங்காத்தா விளையாடியதால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி சூதாட்டம் நடந்து வருவது வாடிக்கையாகும். இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதாகும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலீசாரும் யார் எங்கே சூதாடுகிறார்கள் என்பதை விழிப்புடன் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

Guru Murthy arrested for gambling

அதன்படி, பட்டீஸ்வரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே மங்காத்தா விளையாடி கொண்டிருந்த 8 பேரை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த 36 ஆயிரத்து 540 ரூபாய் பணமும், மற்றும் 6 டூவீலர்கள், 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மங்காத்தா விளையாடிய 8 பேரும் கைது செய்யப்பட்டனர். ராஜ்குமார் (48), வாசுதேவன் (57), குருமூர்த்தி (41) ஐயப்பன் (27), குமார் (47), பாலாஜி (40) சக்திவேல் (32), பரமசிவம் (57) ஆகியோர்தான் அந்த 8 பேர்!

இதில் குருமூர்த்தி என்பவர் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ஆவார். இந்த சூதாட்டத்துக்கு தலைவரே அவர்தானாம். இவர் தலைமையில்தான் எல்லோரும் கூடி விளையாடி இருக்கிறார்கள்! குருமூர்த்தி மங்காத்தா விளையாடினால், விதி அவர் வாழ்க்கையில் விளையாடிவிட்டதே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+